Aran Sei

ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களில் பெண்கள் குறிவைக்கப்படுவதை நிறுத்துங்கள் – பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சந்து

ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களில் பெண்கள் குறிவைக்கப்படுவதை நிறுத்துங்கள். பெண்களை அவர்கள் விரும்பும் வழியில் வாழ விடுங்கள் என்று 2021 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி பட்டம் வாங்கிய ஹர்னாஸ் சந்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் தொடங்கியது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு – ஹிஜாபுடன் வந்தால் தேர்வு எழுத முடியாது என அரசு அறிவிப்பு

“நமது சமூகத்தில் பெண்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுகின்றனர். ஏன் நீங்கள் எப்பொழுதுமே பெண்களை குறிவைக்கிறீர்கள். ஹிஜாப் விவகாரத்தில் கூட பெண்கள் குறிவைக்கப் படுகிறார்கள். பெண்கள் அவர்கள் விரும்பும் வழியில் வாழட்டும். அவளுடைய இலக்கை அடையட்டும். அவளுடைய இறக்கைகளைக் கொண்டு அவள் பறக்கட்டும். அவளுடைய இறக்கைகளை நீங்கள் வெட்டாதீர்கள்” என்று ஹர்னாஸ் சந்து கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய வியாபாரிகளை தடை செய்துள்ள கர்நாடக அரசு அடுத்து விப்ரோவை தடை செய்யுமா? – காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கேள்வி

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளுக்கு ஆதரவாக நாடும் முழுவதும் குரல் எழுந்த நிலையில், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.

மாநில அரசின் தடை உத்தரவை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று உத்தரவிட்டது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 6 இஸ்லாமிய மாணவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர்.

Source: The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்