Aran Sei

உத்தரபிரதேச அரசால் குறி வைத்து தாக்கப்படும் இஸ்லாமியர்கள், தலித்துகள் – உடனே நிறுத்த முன்னாள் குடியுரிமை பணியாளர்கள் வேண்டுகோள்

த்தரபிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக இஸ்லாமியர்களும் தலித்துகளும் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் குறிவைத்து கொல்லப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென முன்னாள் குடியுரிமை பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

மேலும், அடக்குமுறையான தடுப்புச் சட்டங்கள், தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் பொய் வழக்குகள் பதியப்பட்டு இஸ்லாமியர்கள், தலித்துகள் துன்புறுத்தப்படுகிறார்கள்.  போராட்டக்காரர்களை பசு வதையில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம்சாட்டுதல், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை ஒடுக்குதல் மற்றும் காவல்துறையின் தாக்குதல் நடவடிக்கைகள் போன்றவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, இந்த எல்லா சட்ட நடவடிக்கைகளும் சாதாரண சட்ட முறைமைகளின் கீழ் விசாரிக்கப்பட வேண்டுமெனவும் முன்னாள் குடியுரிமை பணியாளர்கள் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி குறிப்பிடுகிறது.

‘ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு இந்திய அரசே காரணம்’ – அமெரிக்க அரசின் மத சுதந்திரத் துறை குற்றச்சாட்டு

இந்த கடிதத்தில் 54 பேர் கையெழுத்திட்டு அனுப்பியுள்ளதாகவும்,”அரசு நிர்வாகத்தின் வரம்பு மீறல் மற்றும் சட்டத்தின் வழியான ஆட்சியை அப்பட்டமாக மீறுதல்” என்ற தலைப்பிட்டு இந்தத் திறந்தவெளி கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாப் ஆளுநரின் முன்னாள் ஆலோசகரும், ருமேனியாவின் முன்னாள் தூதருமான ஜூலியோ ரிபீரியோ, டெல்லியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னரான நஜீப் ஜங் மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹர்ஷ் மந்தர் உட்பட பல முன்னாள் குடிமைப்பணி அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளதாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, “இப்போது கவனிப்பிற்கு உள்ளாக்கவில்லை என்றால், மாநில அரசின் அரசியல் மற்றும் அரசு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஜனநாயகத்தையே சிதைத்து, முற்றிலும் அழித்து விடக்கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது” என்றும் அவர்கள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்