பசுவின் சாணத்தால் கட்டப்படும் வீடுகள் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டால் கூட பாதிப்பு அடையாது என்று குஜராத்தின் தபி மாவட்ட நீதிமன்ற நீதிபதி சமீர் வினோத் சந்திர வியாஸ் தெரிவித்துள்ளார்.
பசுக்களை சட்ட விரோதமாக கடத்திய வழக்கை விசாரித்த குஜராத்தில் உள்ள தபி மாவட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
குஜராத் தபி மாவட்ட நீதிமன்ற முதன்மை மாவட்ட நீதிபதி சமீர் வினோத்சந்திர வியாஸ் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது பேசிய அவர், “பசு என்பது விலங்கு மட்டுமல்ல, அது ஒரு தாய். பசுக்களை கொலை செய்வதை நிறுத்தினால் பூமியின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
பசுக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் நமது செல்வமும், சொத்துக்களும் இல்லாமல் போய்விடும். பசு வதைக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறது.” எனத் தெரிவித்திருக்கிறார். இந்த தகவலை லைவ் லா என்ற இணையதளம் வெளியிட்டிருக்கிறது. தற்போது இந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாட்டுச் சாணத்தால் கட்டப்பட்ட வீடுகள் அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்படுவதில்லை, மாட்டுச் சிறுநீர் பல தீராத நோய்களுக்கு மருந்தாகும் என்பதும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Rangaraj Pandey speech in Brahmin association meeting sparked row | sathyaprabhu interview | Sudras
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.