Aran Sei

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம்: இலங்கை சீதை கோயிலில் இருந்து வரும் கல்

ராமாயண இதிகாசத்தில் ராவணனால் இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்டதாக நம்பப்படும் சீதா எலியா என்னும் பகுதியிலிருந்து ஒரு கல் எடுத்துவரப்பட்டு, அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படவுள்ளது. அங்கு சீதைக்கு கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான இலங்கை பிரதிநிதி மிலிந்த மொரகொட வழியாக இந்தியாவுக்கு இந்தக் கல் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தியில் உயரமான ராமர் சிலை – நிலத்தையும் வீடுகளையும் இழக்கும் தலித், பிற்படுத்தப்பட்ட மக்கள்

இதுதொடர்பாக, இலங்கைக்கான இந்திய பிரதிநிதிகள் குழு தனது ட்விட்டர் பக்கத்தில், “அயோத்தி ராமர் கோயிலுக்காக இலங்கை சீதா எலியவிலிருந்து அனுப்பப்படும் கல் இந்திய – இலங்கை உறவுகளின் பலத்துக்கான ஓர் ஆதாரம். இந்தியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கௌரவ மிலிந்த மொரகொட உயர் ஸ்தானிகரின் பிரசன்னத்துடன் மயூராபதி அம்மன் ஆலயத்தில் இக்கல்லை பெற்றுக்கொண்டார்.” என்று தெரிவித்துள்ளது.

மேலும், இது நாடுகளிடையிலான பன்முக பொதுத்தன்மைகளை கொண்டாடும் அதேவேளை சுற்றுலாத்துறையையும் இரு நாடுகளின் மக்களிடையிலான தொடர்புகளையும் ஊக்குவிக்கின்றது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்