Aran Sei

மருத்துவத்திற்கான ஆக்சிஜனை ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்ய முடியாது – நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

credits : PTI

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன், தாமிர உற்பத்திக்கே பயன்படும் எனவும், மருத்துவ பயன்பாட்டுக்கு முற்றிலுமாக உதவாது எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் லண்டனைச் சேர்ந்த வேதாந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் எனும் தாமிர உருக்காலையை நடத்தி வந்தது. இந்த ஆலை வெளியிடும் நச்சுக் கழிவுகள் காற்று, தண்ணீர் முதலியவற்றில் கலந்து சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகவும் உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. நூறு நாட்கள் கடந்தும் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், மே 22, 2018 அன்று போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும் – தமிழக அரசுக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் கடிதம்

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, மே 28, 2018 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதன் பின்னர் ஆலையை திறக்க கோரி, சட்ட நடவடிக்கைகளை ஸ்டெர்லைட் நிறுவனம் நடத்தி வருகிறது.

‘தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு நடப்பதை விரும்பவில்லை’ : ஸ்டெர்லைட்டின் மனுவிற்கு தமிழக அரசு பதில்

இந்தச் சூழலில், கொரோனா நோய்த்தொற்றால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யும் விதமாக, ஆக்சிஜனை உற்பத்தி செய்து மக்களுக்கு இலவசமாக தர விரும்புவதாக வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

கொரோனாவை பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிக்கும் வேதாந்தா நிறுவனம் – வைகோ குற்றச்சாட்டு

தொடக்கம் முதலே இதை கடுமையாக எதிர்த்த தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது, தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என தெரிவித்தது.

ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியளிக்கலாம் – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் முடிவை வரவேற்கவில்லை என்றும், மாநில அரசு ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தது.

ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது – தமிழ்த்தேசிய பேரியக்கம் அறிக்கை

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் செந்தில் குமார் அடங்கிய அமர்வு ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியது.

‘தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படலாம்; ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும்’: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், ஸ்டெர்லைட் ஆலை மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய மிக குறைந்த கட்டமைப்பே கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தாமிர உற்பத்திக்கே பயன்படும் எனவும் மருத்துவ பயன்பாட்டுக்கு முற்றிலுமாக உதவாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதி கோரும் வழக்கு – இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

ஸ்டெர்லைட் ஆலையால் 1050 டன் ஆக்சிஜன் மட்டுமே உருவாக்க முடியும் எனவும், அதில் 35 டன் மட்டுமே மருத்துவ தேவைக்கு பயன்படுத்த முடியும் என்றும் மற்றவை, தொழிற்சாலைகளுக்கே பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் தயாரிக்க தமிழக அரசு அனுமதி – அரசின் முடிவு அதிர்ச்சியளிப்பதாக திருமாவளவன் கருத்து

ஸ்டெர்லைட் நிறுவனம், 93% முதல் 94% தூய ஆக்சிஜனை தான் அதிகளவில் தயாரிக்கிறது என்றும் மருத்துவ உபயோகத்திற்கு 99.4% தூய ஆக்சிஜன் தேவை என்றும் தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தை விட நீதிக்குழு பாதுகாப்பானது – ரஜினியை பகடி செய்த ஸ்டெர்லைட் விசாரணை குழு ஆலோசகர்

இதற்கிடையில், இன்று (26.04.21) நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, மாநிலத்தின் ஆக்சிஜன் தேவையை நிவர்த்தி செய்ய, ஒரு சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு முடிவெடுத்திருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்