தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் தாமிரக் கழிவுகளைத் தனியார் நிறுவனங்களுக்கு வணிகநோக்கில் விற்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மதுரை கிளை அமர்வு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த மனுவைத் தூத்துக்குடியைச் சேர்ந்த காந்திமதிநாதன் என்பவர் தாக்கல் செய்திருந்ததாகவும், மேலும், அந்த மனுவில், ”தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கழிவுகளால் ஆற்றின் போக்கு மாறி நகருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, தனியாருக்கு சொந்தமான நிலங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தாமிரக் கழிவுகளை விற்க முயல்வது சட்டவிரோதம். எனவே, தாமிரக் கழிவுகளை விற்க தடை விதிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த அமர்வு, ’’உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டுள்ளக் கழிவுகள்குறித்து கேள்வியெழுப்பியும் , இதுகுறித்து , தமிழகப் பொதுப் பணித்துறைச் செயலர் 12 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அதுவரை, ஸ்டெர்லைட் ஆலையின் தாமிரக் கழிவுகளைத் தனியார் நிறுவனங்களுக்கு வணிகநோக்கில் விற்கவும் தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
source ; tamil hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.