அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தளத்தைவிட நீதிக்குழு பாதுகாப்பானது என தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை விசாரிக்கும் குழுவின் சட்ட ஆலோசகர் நடிகர் ரஜினிகாந்தை பகடி செய்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் முன் ஆஜராகாத நடிகர் ரஜினிகாந்தை குறித்து அந்தக் குழுவின் ஆலோசகர் அருள் வடிவேல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் குறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
ஸ்டெர்லைட் படுகொலை குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் , ” ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவியதால் காவல் துறை சுட்டது” என்று கூறியதை அடுத்து அவருக்கு விசாரணை குழு சம்மன் அனுப்பியிருந்தது.
கடந்த பிப்ரவரி 2020 ,ஜனவரி 2021 விசாரணைக் குழுவின் முன் ஆஜராக அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு, கொரானாவை காரணம் காட்டி ரஜினிகாந்த் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.
தூத்துக்குடியில் முதலமைச்சர்: ‘துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு’ நீதி வேண்டும் – கனி மொழி
இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்புக்கு செல்லும் ரஜினி குறித்து பேசிய அவர், ”விசாரணைக்குழுவில் ஐந்து பேர் மட்டுமே உள்ளோம் எனவும் இது அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தை விட கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடம்” குழு முன் ஆஜராக வேண்டும் என்பதன் அடிப்படையில் ஆலோசகர் அருள்வடிவேல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
SOURCE; THE HINDU
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.