Aran Sei

ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியளிக்கலாம் – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

க்சிஜன் உற்பத்தி செய்வதற்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியளிக்கலாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இன்று (ஏப்ரல் 22) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ”நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக மத்திய அரசு எந்தவித முயற்சிகளையும் எடுக்கத் தயாராக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

மேலும், ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியளிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஆக்சிஜன் கசிவால் மக்கள் இறந்துகொண்டிருந்ததை கண்முன்னே பார்த்தேன்” – 24 பேர் உயிரிழந்த சம்பவத்தின் சாட்சியம்

முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது. அதில், ”ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக வழங்க ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியளிக்க வேண்டும். ஸ்டெர்லைட்டில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும்” எனத் தெரிவித்திருந்தது.

Source : Puthiyathalaimurai

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்