Aran Sei

‘தடுப்பூசி விவகாரத்தில் அனைத்து மாநிலங்களும் ஒருமித்த குரலில் பேச வேண்டும்’ – ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் வேண்டுகோள்

டுப்பூசி கொள்முதல் விவகாரம் இந்திய ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்னையாக மாறிவிட்டதால், அனைத்து மாநில அரசுகளும் ’ஒருமித்த குரலில் பேச வேண்டிய நேரம் இது’ என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தடுப்பூசி உற்பத்தியில் பற்றாக்குறை இருக்கும் நிலையில், மாநில அரசுகளே தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் முடிவு தேவையற்றது. தடுப்பூசி செலுத்தும் திட்டமே பல ஒருங்கிணைப்பு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.” என கூறியுள்ளார்.

தேகத்தால் மறைந்தாலும் இசையாய் மலரும் எஸ்பிபி – பிறந்தநாள் புகழஞ்சலி

”இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்ததை போல தடுப்பூசி செலுத்துவதற்கான பொறுப்பை ஒன்றிய அரசே ஏற்க வேண்டும் என மாநில முதலமைச்சர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் ஒருமித்த குரலில் வலியுறுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கை.  மாநில அரசுகளின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தடுப்பூசி திட்டமானது இந்திய மக்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கோடி தடுப்பூசிக்கான ஆந்திர அரசின் டெண்டருக்கான ஜூன் 5 ஆம் தேதி மாலை 5 மணி வரை காலவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், யாரும் டெண்டர் கோர முன்வரவில்லை என அந்த கடித்ததில் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

‘ஏழு தமிழர்களையும் நெடுங்கால இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்’ – அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கூட்டறிக்கை

கொரோனா விவகாரத்தில், ஒன்றிய அரசை சுட்டிக்காட்டி அரசியல் செய்யாமல், பிரதமரின் கைகளை வலுப்படுத்தும் விதமாக இணைந்து செயல்பட வேண்டும் என ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு, கடந்த மாதம் ஜெகன் மோகன் ரெட்டி அறிவுரை வழங்கியிருந்த நிலையில், நேற்று இந்த கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source : The Indian Express 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்