Aran Sei

வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் விருப்பத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் – பிரதமருக்கு சுப்ரமணியன் சுவாமி கடிதம்

மூன்று வேளாண் சட்டங்களையும் சம்பந்தப்பட்ட மாநில அரசு விரும்பினால் மட்டும் அந்த மாநிலத்தில் செயல்படுத்த வேண்டும் எனப் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 5 ஆம் தேதி, பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவித்திருப்பதாகவும், மேலும் விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்று வரும் பிரச்னைக்குத் தீர்வு காணும் ஆலோசனையும் அந்தக் கடிதத்தில் வழங்கி இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘விவசாய கடன் தள்ளுபடி பெரும்பகுதி விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும்’ – முத்தரசன்

வேளாண் சட்டங்களுக்குத் தான் ஆதரவளிப்பதாகவும், அந்தச் சட்டங்களை அமல்படுத்துவதற்கு ஆதரவாக  நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு வாக்களித்தாகவும் தெரிவித்துள்ள சுப்ரமணிய சுவாமி, ”வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த மூன்று விதிகளை உருவாக்கி, அவற்றை வேளாண் சட்டங்களுடன் இணைக்க வேண்டும்” எனக் கூறியிருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்  விதியாக, ”வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த எழுத்துப்பூர்வமாக விருப்பம் தெரிவிக்கும் மாநிலங்களில் மட்டுமே அமல்படுத்த வேண்டும், வேளாண் சட்டத்தின் நல்ல அம்சங்களின் மூலம் கிடைக்கும் பலன்கள், அதை நடைமுறைப்படுத்த விருப்பம் தெரிவிக்காத மாநிலங்களுக்குக் கிடைக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்” என அந்தக் கடித்ததில் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்திருப்பதாக தி ஹிந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷாவை அவமதித்ததாக புகார் – நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபாருக்கிக்கு ஜாமீன்

இரண்டாவது விதியாக, ”குறைந்தபட்ச ஆதரவு விலை பெற அனைத்து மாநிலமும் தகுதி பெறும் விதமாகக் குறிப்பிட வேண்டும்” என்றும், மூன்றாவது விதியாக, ”விவசாய வர்த்தகத்தைத் தவிர, பெரும் வணிகம் அல்லது வர்த்தக நலன்கள் இல்லாதவர்கள் மட்டுமே தானியங்களை வாங்கும் விதமாகக் கட்டுப்படுத்த வேண்டும்” என்றும் சுப்ரமணியன் சுவாமியின் கடித்ததில் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிகள் வேளாண் சட்டங்களுக்கு அதிருப்தி தெரிவிப்பவர்களுக்கு பதிலளுக்கும் என்றும், இவை நடைமுறைபடுத்தப்பட்டால் அவர்கள் போராட்டம் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறியதாக தி ஹிந்து  தெரிவித்துள்ளது.

ராமர் கோவிலுக்கு காங்கிரஸ் நிதி திரட்டல் – மணிஷ் திவாரி கடும் எதிர்ப்பு

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் “பெரிய அளவிலும், அமைதியான முறையிலும்” போராட்டங்கள் நடைபெற்று வருவதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”போராட்டத்தில் சிக்கலை உருவாக்கும் நோக்கில் தேச விரோத சக்திகள், கலந்திருப்பதாகவும், பல்லாயிரக்கணக்கானவர்கள் அமைதியான முறையில் ஒரு இடத்தில் கூடி பல மாதங்களாகப் போராடும்பொழுது, இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும், அவற்றைக் கண்டிப்புடன் கையாள வேண்டும்” எனப் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, தனது கடிதத்தில் எழுதியிருப்பதாக, தி ஹிந்து கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்