Aran Sei

இலவசத் திட்டங்களை வழங்கும் மாநிலங்கள் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் – பிரதமர் மோடியிடம் உயர் அதிகாரிகள் தகவல்

credits : the indian express

ந்தியாவில் இலவசத் திட்டங்களை வழங்கும் சில மாநிலங்கள் இலங்கையைப் போல பொருளாதார நெருக்கடியை சந்திக்க வாய்ப்புள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி – காகிதப் பற்றாக்குறையால் அச்சுப் பதிப்புகளை நிறுத்திய செய்தித்தாள்கள்

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா மற்றும் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா மற்றும் ஒன்றிய அரசின் மற்ற உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டம், 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒன்றிய அரசின் உயர்மட்ட செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் ஒன்பதாவது சந்திப்பாகும்.

“தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மற்றும் கவர்ச்சிகர திட்டங்கள் குறித்து அதிகாரிகள் பேசியுள்ளனர். குறிப்பாக பஞ்சாப், டெல்லி, தெலங்கானா, ஆந்திரா, மேற்குவங்கம் ஆகியவற்றில் மாநில அரசுகள் அறிவித்துள்ள திட்டங்கள் பொருளாதார ரீதியாக நிலைக்கத்தக்கவை அல்ல” என பிரதமரிடம் உயர்மட்ட அதிகாரிகள் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘ஹர ஹர மோடி’ – பிரதமர் மோடியொரு சிவ அவதாரமென ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ புகழாரம்

“இலவசத் திட்டங்களால் மாநிலங்களின் பொருளாதார நிலை அதலபாதாளத்தை நோக்கி செல்கின்றது. ஒன்றிய அரசு மட்டும் உதவாவிட்டால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும்” என அதிகாரிகள் மோடியிடம் தெரிவித்துள்ளனர்.

“நிதிநிலையைச் சீரமைக்காமல் இலவசத் திட்டங்களை மாநிலங்கள் தொடர்ந்து வழங்கினால் இலங்கை, கிரீஸ் ஆகிய நாடுகளில் ஏற்பட்டது போன்ற மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை மாநில அரசுகள் சந்திக்க நேரிடும்” என பிரதமர் மோடியிடம் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் கூறியுள்ளனர்.

Source : firstpost

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்