Aran Sei

 மத்திய அரசு சட்டங்களுக்கு எதிராக மாநில  அரசுகள் தீர்மானம் நிறைவேற்றலாம் – உச்சநீதிமன்றம்

த்திய அரசுச் சட்டங்களுக்கு எதிராக மாநில சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதில் தவறில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த தன்னார்வல அமைப்பு சம்தா அந்தோலன் சமிதி  உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அடங்கிய அமர்வு இதைத் தெரிவித்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பில் மத்திய பட்டியலில் உள்ள மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக தீன்மானம் நிறைவேற்றிய ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநில  சட்டசபைகளுக்கு அதிகாரம் இல்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, தி இந்து தெரிவித்துள்ளது.

தலித் செயல்பாட்டாளர் படுகொலை: குற்றவாளிகளை காப்பாற்றும் குஜராத் அரசு – ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

“அவர்கள் (மாநில சட்டமன்றங்கள்) மத்திய பட்டியலில் உள்ள விஷயங்களில் சட்டங்களை உருவாக்க முடியாது என்பதால், சட்டங்கள்மீது அவர்களுக்குக் கருத்து இருக்க முடியாது,” மனுதாரரின் வழக்குரைஞர் சக்ரவர்த்தி வாதிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

”இந்தத் தீன்மானங்கள் மாநில சட்டசபையில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின்  கருத்து. அவர்கள் மக்களுக்குச் சட்டத்தை மீறுமாறு கூறவில்லை, சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மட்டுமே மத்திய அரசிடம் கோரியுள்ளனர். இது ஒரு கருத்து மட்டுமே, சட்டத்தின் சக்தி இல்லை,” என தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலில் தண்ணீர் குடித்ததால் தாக்கப்பட்ட இஸ்லாமிய சிறுவன்: சிறுவனின் கல்விக்கு நிதியளித்த பொதுமக்கள்

“கேரள சட்டமன்றத்திற்கு நாடாளுமன்றம் கொண்டு வரும் சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் இல்லை என்பதனாலேயே, அவர்கள் கருத்து தெரிவிக்க அவர்களுக்கு உரிமை இல்லையா?” என தலைமை நீதிபதி பாப்டே கேள்வி எழுப்பியுள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் மேலும் ஆராய்ச்சி செய்யுமாறு மனுதாரருக்கு அறிவுருத்தி இந்த வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்