Aran Sei

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் – நாடாளுமன்றத்தில் அமித் ஷா வாக்குறுதி

credits : new indian express

நாடாளுமன்ற மக்களவையில், ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசிய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட், இதன் மூலம் ஒரே நாடு, ஒரே அரசியல் சாசனம் என்ற கனவு நிறேவேறியுள்ளது என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சி சார்பாக, இந்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அதிர் சௌத்ரி “அரசியல் சாசன பிரிவு 370ஐ ரத்து செய்து ஒற்ரை ஆண்டுகளுக்குப் பிறகு, பூளோகத்தில் சொர்க்கத்தை காண்பிப்போம் என்று கூறுகிறீர்கள். இந்தச் சட்டத்தை மேலும் ஆட்களைக் கொண்டு வருவதற்காக (வெளியாட்களை) கொண்டு வந்துள்ளீர்கள். அப்படியென்றால், எந்த வித முன் ஏற்பாடும் இல்லாமல் அரசியல் சாசன பிரிவு 370ஐ நீங்கள் ரத்து செய்துள்ளீர்கள்” என்று தெரிவித்தார்.

‘போக்சோ’ வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதி – பதவிக்காலத்தைக் குறைத்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

இந்த மசோதாவை எதிர்த்துப் பேசிய காஷ்மீரின், தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர் ஹஸ்னைன் மசூடி, “அரசியல் சாசன பிரிவு 370 நீக்கப்பட்டது எங்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல், இதை முறையான வழிகளில் எதிர்க்க வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளோம். இந்த மசோதாவை கொண்டு வருவதற்கு முன்னர், இதை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை அரசு பொறுமை காத்திருக்க வேண்டும். நாளை உச்சநீதிமன்றம், அரசியல் சாசன பிரிவை நீக்கியது செல்லாது என்று அறிவித்தால் என்ன செய்வீர்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

திமுக தரப்பில், இந்த மசோதாவை எதிர்த்துக் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திமுக எப்போதும் மாநில சுயாட்சிக்கும், ஜனநாயகத்திற்கும் ஆதராவகவே இருந்துள்ளது என்று கூறியதுடன் “எங்களுக்குத் தேவை சுயாட்சியே, ஒற்றையாட்சியல்ல” என்ற அண்ணாவின் கருத்துகளை மேற்கோள் காட்டி பேசினார்.

அயோத்தி ராமர் கோயில் கட்ட மக்களிடம் பணம் மோசடி – கைது செய்து காவல்துறை நடவடிக்கை

தமிழநாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் பாஜகவை தேர்ந்தெடுக்கவில்லை என்பதால், இந்த அரசு அந்த மாநிலங்கைளயும் கூடப் பிரிக்கலாம் என்று கூறிய தமிழச்சி தங்கபாண்டியன், “அநீதி ஆட்சி செய்யும்போது, அங்குப் போராட்டமே கடமையாகும்” என்ற, அறிஞர் ஜான் லாக்கின் கருத்தைச் சுட்டிக்காட்டி, ஜம்மு காஷ்மீர் சீரமைப்பு மசோதாவை திமுக எதிர்ப்பதாகத் தெரிவித்தார்.

மசோதாவை எதிர்த்துக் கருத்து தெரிவித்த ஏய்எம்ஐஎம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஒவைசி, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில  அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியிலிருந்து இந்த அரசு தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

சூரப்பா ஊழலில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது: கமல்ஹாசனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டவர்கள் தலையிடக் கூடாது என்று கூறும் அரசு, ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காஷ்மீருக்கு அழைத்துச் சென்றது ஏன் என்று ஓசைசி கேள்வி எழுப்பினார்.

காஷ்மீரில் குறைந்த அளவு இஸ்லாமியர்களே அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய ஒவைசி, இந்த மசோதாவை ஆதரிப்பவர்கள், நாளை மும்பை, சென்னை, பெங்களுரு, ஹைதராபாத், லக்னோ ஆகிய ஆகிய நகரங்கள் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படும்போது, இதைப் புரிந்துகொள்வார்கள் என்று கூறினார்.

இறுதியாக, ஜம்மு காஷ்மீர் சீரமைப்பு மசோதா தொடர்பான விவாதத்தில் பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசியல் சாசன பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் பிறகான நிலைமைகுறித்து அறிக்கை கேட்பவர்கள், அதற்கு முன்னர் 70 ஆண்டுகள் காஷ்மீரின் நிலைமைகுறித்த அறிக்கையை அளிப்பார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

இது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தவறான நடவடிக்க என்று உச்சநீதிமன்றம் கருதியிருந்தால், அதற்குத் தொடக்கத்திலேயே நீதிமன்றம் தடை விதித்திருக்கும் என்று  கூறிய அமித் ஷா, ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி இதனால் தடைபடாது என்றும் கூறினார்.

போராட்டம் செய்வதற்கான உரிமை வரையறைக்கு உட்பட்டது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஜம்மு காஷ்மீரில், 80 சதவீத அரசு ஊழியர்கள் வெளிமாநிலத்தவர்கள் என்று தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர் தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்த அமித் ஷா அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்று கூறியதுடன், மதத்தின் அடிப்படையில், அதிகாரிகள் நியமிக்கப்படுவதில்லை என்றும் கூறினார்.

இறுதியாக, ஏற்கனவே அளித்த வாக்குறுதியில் உறுதியாய் இருப்பதாகக் கூறிய அமித் ஷா, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் கூறினார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்