Aran Sei

உளவு பார்க்கப்பட்ட பத்திரிகையாளர்கள் பட்டியல் – தி வயர் செய்தி நிறுவனம் வெளியீடு

ஸ்ரேலை சார்ந்த பி.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகசஸ் ஸ்பைவார் வழியாக பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்பட்டது தொடர்பாக 128 பேரின் பெயர் பட்டியலை தி வயர் வெளியிட்டுள்ளது.

கண்காணிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் விவரங்கள்

பெகசஸ் ஸ்பைவார் வழியாக 40 பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர் அல்லது கண்காணிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பத்திரிகையாளர்களின் தொலைபேசியை ஆராய்ந்ததாகவும் அதில் 5 பேரின் தொலைபேசி கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அவை;

1. எம்.கே. வேணு – தி வயர் செய்தியின் நிறுவனர், ஆசிரியர், இவரது தொலைபேசி கண்காணிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2.சுஷாந்த் சிங்- இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள்  பத்திரிகையாளர்.

‘இது நம்ம காலம்’ – ‘சார்பட்டா பரம்பரை’ பேசும் அரசியல் என்ன?

3.சித்தார்த் வரதராஜன் – தி வயர் செய்தியின் நிறுவனர் , ஆசிரியர். (இவரது தொலைபேசியும் கண்காணிக்கப்பட்டுள்ளதாக  உறுதிபடுத்தப்பட்டுள்ளது)

4.பரஞ்சோய் குஹா தகுர்த்தா- இ.பி.டபிள்யுவின் முன்னாள் ஆசிரியர் (இவரது தொலைபேசியும் கண்காணிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது)

5.எஸ்.என்.எம்.அப்தி – அவுட்லுக் முன்னாள் பத்திரிகையாளர். (இவரது தொலைபேசியும் கண்காணிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது)
6.விஜய்தா சிங்- தி இந்து பத்திரிகையாளர்

கோடீஸ்வரர்களின் விண்வெளி சுற்றுப்பயணம் – முதலாளித்துவ வீழ்ச்சியின் அடையாளம்

7.ஸ்மிதா சர்மா-டிவி18 முன்னாள்  ஆசிரியர்
8.ஷிஷிர் குப்தா- இந்துஸ்தான் டைம்ஸில் நிர்வாக ஆசிரியர்
9.ரோகிணி சிங்- சுயாதீன ஊடகவியலாளர், தி வயர் செய்திக்காக அரசியல்வாதிகளின் சர்ச்சைக்குரிய பொருளாதாரத் தொடர்புகள் குறித்து எழுதி வருபவர்
10.தேவிரூபா மித்ரா – தி வயர் ஆசிரியர்
11. பிரசாந்த் ஜா- ஹிந்துஸ்தான் டைம்ஸ் முன்னாள் பத்திரிகையாளர்
12. பிரேம் சங்கர் ஜா- இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் பல செய்தித்தாள்களில் தலையங்கப்பத்திரிகையாளராக பணி வகித்த ஒரு மூத்த பத்திரிகையாளர். தி வயருக்கு வழக்கமான பங்களிப்பாளராக உள்ளார்.
13.சுவாதி சதுர்வேதி- சுயாதீன பத்திரிகையாளர்,பிரபலமற்ற பாஜக ஐடி செல் என்பது பற்றி ஒரு புத்தகம் எழுதினார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

14.ராகுல் சிங்- இந்துஸ்தான் டைம்ஸின் நிருபர்
15.அவுரங்கசீப் நக்ஷ்பாண்டி – இந்துஸ்தான் டைம்ஸில் பணியாற்றிய அரசியல் நிருபர்.
16.ரித்திகா சோப்ரா- இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர்
17.முசாமில் ஜலீல்- இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர், காஷ்மீர் குறித்து எழுதி வருகிறார்.
18.சந்தீப் உன்னிதன் – இந்தியா டுடே பத்திரிகையாளர்.
19. மனோஜ் குப்தா: டிவி 18 இல் விசாரணைகள் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களின் ஆசிரியர்.

20. ஜே. கோபிகிருஷ்ணன்: தி பயனியர் பத்திரிகையின் விசாரணைப்பிரிவு நிருபர்.

21. சைக்கத் தத்தா: பல பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.

22. இப்திகார் கிலானி: காஷ்மீர் குறித்து செய்தி சேகரித்து வந்த டி.என்.ஏ பத்திரிகையின் முன்னாள் நிருபர்.

ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்குத் தந்தது என்ன? – நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி

23. மனோரஞ்சன் குப்தா: வடகிழக்கு மாநிலத்தைச் சார்ந்த பத்திரிகையாளர், பிரான்டியர் டிவி பத்திரிகையின் ஆசிரியர்.

24. சஞ்சய் ஷியாம்: பீகாரைச் சார்ந்த பத்திரிகையாளர்.

25. ஜஸ்பால் சிங் ஹெரன்: லூதியானாவை தளமாகக் கொண்ட பஞ்சாபி நாளேடான ரோசானா பெஹ்ரேடரின் தலைமை ஆசிரியர்.

26. ரூபேஷ் குமார் சிங்: ஜார்க்கண்டின் ராம்கர்ஹ் பகுதியைச் சார்ந்த சுயாதீன பத்திரிகையாளர்.

27. தீபக் கிட்வானி: லக்னோவைச் சார்ந்த டி.என்.ஏ பத்திரிகையாளர் முன்னாள் நிருபர்

ஆகிய 27 பத்திரிகையாளர்களின் பெயர்களை தி வயர் வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்