Aran Sei

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு எதிரொலி: எல்லை பாதுகாப்பு படையினரை காவல்துறை கண்காணிக்க வேண்டும் – மம்தா பானர்ஜி

நாகாலாந்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்க மாநிலத்தின் அதிகார வரம்பின் கீழ் உள்ள நிலையில், எல்லை பாதுகாப்பு படையினர் தங்கள் அதிகார வரம்பபை மீறி செயல்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாநில நிர்வாக சீராய்வுக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, நாகாலாந்து நிகழ்வையும், சமீபத்தில் சட்டமன்ற தேர்தலின்போது, கூச்பேகார் பகுதியில் பாதுகாப்பு படையினரால் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்களும், காவல்துறை ஆய்வாளர்களும் எல்லை பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில், எல்லை பாதுகாப்பு படையினர் சர்வதேச எல்லையிலிருந்து 50 கி.மீ தூரம் வரையிலான பகுதியில் சோதனை செய்ய, பொருட்களை பறிமுதல் செய்ய மற்றும் கைது செய்ய வழிவகை செய்யும் சட்ட திருத்தத்தை சமீபத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதற்கு முன்னர் எல்லையிலிருந்து 15 கி.மீ தொலைவுக்கு மட்டுமே எல்லை பாதுகாப்பு படையினருக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை, மாநில உரிமையில் தலையிடுவதாக கூறி இந்த சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிவருவது குறிப்பிடத்தக்கது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்