Aran Sei

கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – டெல்லி, ஒடிசா, குஜராத் அரசுகள் அறிவிப்பு

image credit : thewire.in

கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு திரும்பும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என டெல்லி, ஒடிசா, குஜராத் அரசுகள் அறிவித்திருக்கின்றன.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா, உத்திரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில், பல லட்கணக்கணக்கான மக்கள் கும்பமேளாவில் பங்கேற்று வருகின்றனர்.

கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் முதல் கட்டத்தில் 2,171 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கும்பமேளாவில் பங்கேற்க வந்த சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இன்னும் பலருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கின்றன என ஹரித்வார் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

‘கும்பமேளா சென்றவர்கள் கொரோனாவை பிரசாதமாக மக்களுக்கு வழங்கக்கூடாது’ – மும்பை மேயர் எச்சரிக்கை

இதையடுத்து, கும்பமேளாவில் பங்கேற்று திரும்புபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என டெல்லி, ஒடிசா, குஜராத் அரசுகள் தெரிவித்திருக்கின்றன.

இது தொடர்பாக டெல்லி தலைமை செயலாளர் விஜய் தேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கும்பமேளா சென்று திரும்பும் டெல்லியை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்றை கண்டறியும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை கட்டாயம் மேற்க்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஆணவம் மக்களைக் கொல்கிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

“ஏப்ரல் 4 முதல் 17 வரை கும்பமேளா சென்று வந்தவர்கள் அனைவரும் தங்கள் விவரங்களை டெல்லி அரசின் கொரோனா கட்டுப்பாடு இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 30 வரை செல்ல இருப்பவர்பள், முன்பே விவரங்களைத் தெரிவித்து விட்டுச் செல்ல வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கும்பமேளா சென்று திரும்பு அனைவரும், தங்களை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கொரோனா மையத்திற்கு 2 வாரங்கள் அனுப்பபடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

’கொரோனா உயிரிழப்புக்கு பொறுப்பேற்று இறப்புச் சான்றிதழிலும் மோடியின் படத்தை பதிவிட வேண்டும்’: நவாப் மாலிக்

ஒடிசா அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், “கும்பமேளாவிற்கு செல்லும் முன் தங்கள் விவரங்களைச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கும்பமேளாவுக்கு சென்று திரும்புபவர்கள் அனைவருக்கும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்படும். மேலும் அவர்கள், தங்களை 14 நாட்கள் கண்டிப்பாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்திருக்கும் அறிவிப்பில், “கும்பமேளா சென்று திரும்புபவர்கள் நேரடியாக அவர்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

Source : ANI

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்