Aran Sei

இளம்பெண் கொலை வழக்கில் உத்தரகாண்ட் பாஜக தலைவரின் மகன் கைது: கொலைக்கான ஆதாரங்கள் உள்ள சொகுசு விடுதியை ஏன் மாநில அரசு இடித்தது? – தந்தை கேள்வி

த்தரகாண்டில் முன்னாள் பாஜக அமைச்சர் வினோத் ஆர்யா என்பவரின் மகன் புல்கிட் ஆர்யாவிற்கு பவ்ரி ஹர்க்வல் மாவட்டம் ரிஷிகேஷ் அருகே வனந்த்ரா என்ற பெயரில் சொகுசு விடுதி உள்ளது.

இதில், அங்கிதா பண்டாரி (வயது 19) என்ற இளம்பெண் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 18-ந்தேதி பணி முடிந்தும் அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யா மீது சந்தேகத்தின் பேரில் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் 4 நாட்கள் கழித்து, கடந்த 22-ந்தேதி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன இளம்பெண் அங்கிதாவை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், அங்கிதாவை சொகுசு விடுதி உரிமையாளரான புல்கிட் ஆர்யாவே கொலை செய்தது தெரியவந்தது.

உத்தரகாண்ட்: பாலியல் தொழிலுக்கு வர மறுத்த பெண்ணை படுகொலை செய்த வழக்கில் மகன் கைதானதால் பாஜக முன்னாள் அமைச்சர் கட்சியிலிருந்து நீக்கம்

அங்கிதாவை விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் தள்ளி புல்கிட் ஆர்யா கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு சொகுசு விடுதியில் பணியாற்றும் மேலும் 2 ஊழியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கிதாவை கால்வாயில் தள்ளி கொலை செய்த புல்கிட் ஆர்யா, சொகுசு விடுதி மேலாளர் உள்பட 3 பேரை கைது செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அங்கிதாவின் உடல் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டது.

இதன்மீது நடந்த முதற்கட்ட விசாரணையில், பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்ததால் அங்கிதாவை விடுதி உரிமையாளர் புல்கிட் கொலை செய்து கால்வாயில் வீசியது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அங்கிதா வரவேற்பாளராக பணியாற்றி வந்த புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமான ‘வனந்த்ரா’ சொகுசு விடுதியை இடித்துத் தள்ள முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி உத்தரவிட்டார்.

உத்தரகாண்ட்: பாலியல் தொழிலுக்கு வர மறுத்த பெண் படுகொலை – கைதான பாஜக தலைவரின் மகன்

இதனை தொடர்ந்து விடுதியின் ஒரு பக்கம் இடித்துத் தள்ளப்பட்டது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளச் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கிதாவின் குடும்பத்தினர், பிரேதப் பரிசோதனை அறிக்கையை முதலில் ஒப்படைக்கும் வரை அவரது இறுதிச் சடங்கை நடத்தமாட்டோம் என தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி அங்கிதாவின் தந்தை கூறும்போது, அந்த தங்கும் விடுதியில் கொலைக்கான ஆதாரங்கள் உள்ளபோது அதனை ஏன் உத்தரகாண்ட் அரசு இடித்து உள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வு குழுவினர், அங்கிதாவின் வாட்ஸ்அப் உரையாடல்களை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். அந்த சாட்டிங்கில், வாடிக்கையாளர்கள் என்ற பெயரில் சொகுசு விடுதியில் தங்க வரும் நபர்களுக்கு ‘சிறப்புச் சேவை’ செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன் என தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரிடம் அங்கிதா தெரிவித்து உள்ளார்.

உத்தரகாண்ட்: பெண்ணை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய பாஜக தலைவரின் மகன் – வாட்ஸ் அப் உரையாடலில் அம்பலம்

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், நீரில் மூழ்கி அங்கிதா உயிரிழந்ததும், அவரது உடலில் மரணத்திற்கு முன்பு ஏற்பட்ட காயங்களும் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வரும் குழுவின் டி.ஐ.ஜி. பி.ஆர். தேவி கூறும்போது, சொகுசு விடுதியில் உள்ள பணியாளர்கள் ஒவ்வொருவரையும் விசாரணைக்கு காவல் நிலையம் வரும்படி கூறியுள்ளோம். ஒவ்வொருவரின் வாக்குமூலமும் பெறப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சொகுசு விடுதியின் பின்புலம் பற்றி முழு அளவில் ஆய்வு செய்து வருகிறோம். அங்கிதாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மீதும் விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார். முறையான பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் எங்களுக்கு வரவில்லை. எனினும், இன்று எங்களது கைகளில் அது கிடைத்து விடும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என அங்கிதாவின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Source : hindustantimes

வைச்ச செங்கலை கூடக் காணோம் | பாஜகவின் மதுரை AIIMS காமெடிகள் | Aransei Roast | BJP | DMK | MADURAI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்