Aran Sei

மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் – திமுக தேர்தல் வாக்குறுதி

மாநில சுயாட்சியை வென்றெடுக்க, திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று, திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில சுயாட்சி மற்றும் மாநில உரிமைகள் குறித்து ஆராய்வதற்காக ஏற்கனவே அமைக்கப்பட்ட நான்கு கமிட்டிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலங்கள் சுயாட்சியை பெறுவதற்கு, அரசியல்அமைப்புச் சட்டத்தை திருத்த, திமுக தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும் என்று, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வருதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளிலும், தமிழ் உட்பட அந்தந்த மாநிலங்களின் மொழிகளும் இணைக்கப்பட வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், தமிழிலும் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் கிளை (மேல்முறையீட்ட நீதிமன்றம்) தமிழகத்தில் உருவாக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழை வழக்காடும் மொழியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்