Aran Sei

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல்: மத்திய, மாநில அரசுகளே காரணம் – சர்வதேச நீதிபதிகள் ஆணையம்

credits : The New York Times

நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள படி, ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள், தடுப்பூசிகள் போன்றவற்றின் தட்டுப்பாட்டை மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் கொரோனா இரண்டாவது அலைக்குத் தயாராவதில் அரசாங்கம் தோல்வியைச் சந்தித்திருப்பதாகவும் சர்வதேச நீதிபதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்றைய தினம், 3, 79, 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.83 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் 2.04 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 3,645 பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகளே காரணம் என விமர்சித்துச் சர்வதேச நீதிபதிகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் மரணமடையும் பத்திரிகையாளர்கள்: உலகளவில் இந்தியா மூன்றாம் இடம்

இது தொடர்பாக சர்வதேச நீதிபதிகள் ஆணையம் வெளியிடப்பட்ட அறிக்கையில், ”கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். மிக அதிகளவிலான மக்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டும் மரணமடைந்தும் வருகின்றனர். இந்திய அரசு உடனடியாக இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மதுரையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால் மருத்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்படும் – சு. வெங்கடேசன் எச்சரிக்கை

மேலும், ”மத்திய மற்றும் மாநில அரசுகள், எளிதாக கணிக்க கூடிய வகையில் இருந்த, கொரோனா இரண்டாவது அலையைப் பற்றிக் கவனத்தில் கொள்ளாமல், முன் தயாரிப்புகள் ஏதுமின்றி இருந்ததுதான் இந்தியாவில் கொரோனா இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, நாள் ஒன்றுக்கு 1500 முதல் 3000 பேர் வரை மரணமடைவதற்கான காரணம்” என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் – மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல், நாள் ஒன்றுக்கு 2,00,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும், கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி இந்தியாவில் ஒரே நாளில் 3,60 960 பேர் பாதிக்கப்பட்டதாகவும், இது தான் உலகிலேயே ஒரே நாளில் அதிகளவில் பதிவான பாதிப்பு என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலின் எதிரொலி – ஐ.பி.எல் போட்டியிலிருந்து விலகிய நடுவர்கள்

”பல மருத்துவமனைகளில் போதிய இடமில்லாததால் நோயாளிகள் திரும்ப அனுப்பபட்டுள்ளனர். பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணமடைய நேரிடும் எனும் படிவத்தில் கையெழுத்து வாங்கிய பிறகே நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் தோல்வியால் தான் மக்கள் உதவி கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர்” என்றும் சர்வதேச நீதிபதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்