Aran Sei

தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சியினர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கோரி, பல்வேறு எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் முழங்கங்களை எழுப்பினர்.

மறைந்த மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காதி, மற்றும் ஜஸ்வந்த் சிங், தருண் கோகாய், மோதிலால் வோரா, அகமது பட்டேல், ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட 26 மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பிறகு காங்கிரஸ், திமுக, இடது சாரி கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சபையின் மையத்திற்கு சென்று முழங்கங்களை எழுப்பியுள்ளனர்.

டிராக்டர் பேரணி Vs ரத யாத்திரை: விவசாயிகளை விமர்சிக்க பாஜகவுக்கு உரிமை உள்ளதா?

சிவசேனா உறுப்பினர்கள் தங்கள் இடத்தில் இருந்தபடியே முழங்களை எழுப்பினர். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என எதிர்கட்சியினர் கோரியதோடு, போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, 20 க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வு முன்பு குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையைப் புறக்கணித்தனர்.

’ஆர்எஸ்எஸ்காரர்களை போராட்டத்திற்குள் அனுப்பி, மத்திய அரசு வன்முறையை தூண்டுகிறது’ – விவசாயிகள் குற்றச்சாட்டு

சபையின் மையத்திற்கு வந்து உறுப்பினர்கள் முழக்கமிட்டபோது, கொரோனா நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டி இருப்பதால், அனைவரையும் இருக்கைக்குத் திரும்புமாறு சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்