Aran Sei

அருட்தந்தை ஸ்டான் ஸ்வாமி மரணம்: விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் – வழக்கறிஞர் மிஹிர் தேசாய்

ழங்குடியின உரிமை செயல்பாட்டாளர் அருட்தந்தை ஸ்டான் ஸ்வாமியின் மரணம் தொடர்பாக நீதித்துறை விசாரணை மேற்கொள்ளப்படுவதை சட்டத்தின் (“parens-patriae” ) உச்சபட்ச அதிகார வரம்பிற்கு உட்பட்டு உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டுமென அவரது வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அருட்தந்தை ஸ்டான் ஸ்வாமியின் வழக்கறிஞர் மிஹிர் தேசாய் கூறுகையில், சுவாமியின் உதவியாளர், தந்தை ஃப்ரேசர் மஸ்கரென்ஹாஸை , சுவாமியின் மரணம் குறித்து நடத்தப்படும் விசாரணையில் குற்றவியல் சட்டம் பிரிவு 176 ன் படி பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மோடி அரசை விரட்டும் ‘பெகாசிஸ்’ என்னும் பிசாசு – அ.மார்க்ஸ்

தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடைபெற வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும், விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடவேண்டுமென வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,”மனுதாரர் இறந்துள்ள நிலையில், அவர் தாக்கல் செய்த மனுக்கள் நிலுவையில் உள்ளபோது உயர்நீதி மன்றம் பரந்துபட்ட அதிகாரம் கொண்டுள்ளது” என்று தேசாய் உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள் – காவல்துறையினர் குவிப்பு

இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான வழக்கறிஞர் அருணா ராய், ஸ்டான் ஸ்வாமியின் மரணம் தொடர்ப்பான நீதிவிசராணை இன்னும் தொடங்கவில்லை என்று கூறியுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

மேற்கொண்டு, இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 4 அன்று விசாரிக்க உள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்