Aran Sei

ஸ்டான் சுவாமியை சிறை நிர்வாகம் மிக மோசமாக நடத்தியது – சக கைதியின் 14 பக்க உருக்கமான கடிதம்

விஐபி கைதிகளுக்கு அனைத்து வகையான வசதிகளும் கிடைக்கின்றன. ஆனால்  ஸ்டான் சுவாமி போன்ற கைதிகளுக்கு மிக அடிப்படையான உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன” என்று அவருடன் தலோஜா சிறையில் இருந்த இக்லாக் ரஹீம் ஷேக் கூறியுள்ளார்.
பாதிரியார் ஸ்டான் ஸ்வாமியின் உடல்நிலை மோசமடைந்து வருவதைச் சிறை நிர்வாகம் புறக்கணித்ததோடு, அவருக்குச் சிகிச்சை அளிக்கவும் மறுப்பது எனக் குற்றம் சாட்டி 14 பக்க கடுமையான கடிதத்தை தி வயர் இணையப் பத்திரிக்கைக்கு இக்லாக் ரஹீம் ஷேக் எழுதியுள்ளார்.  அந்த கடித்தல் இக்லாக் ரஹீம் ஷேக் கூறியது,
2019 அக்டோபர் மாதத்தில் ஸ்டான் சுவாமி முதன்முதலில் சிறைக்குக் கொண்டுவரப்பட்ட பொழுது அவர் ​​வயதானவராக இருந்தாலும், நிலையாக இருந்தார். ஆனால் கொஞ்ச நாட்களில் அவருக்கு இதயம் மற்றும் முதுகெலும்புகளில் பிரச்சினை ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால் அவரது கோரிக்கையை அப்போதைய சிறை கண்காணிப்பாளர் கௌஸ்துப் குர்லேகர், சிறை மருத்துவர் சுனில் காலே ஆகியோர் நிராகரித்தனர்.
“ஸ்டான் சுவாமி சிறையில் நிர்ப்பந்திக்கப்பட்ட முறையில் வாழ்ந்த நிலைமையைப் பார்த்தால் “ஜனநாயகத்தின் அடித்தளத்தையே நாம் அசைத்துப் பார்த்திருக்க  வேண்டும்”. ஸ்டான் சுவாமி தொடர்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பொது “செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் பணம் படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுச் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டனர்.
சிறைக் கைதிகளுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்குக்கூடச் சிறை அதிகாரிகள் அதிக அளவில் பணம் கேட்டனர். “அரசியலமைப்புச் சட்டத்தின்படி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நமது வாழ்வுரிமை, சிறையில் இருந்தாலும் அப்படியே இருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லை. பெரும்பாலான அடிப்படை வசதிகளும் எங்களுக்கு மறுக்கப்பட்டன.
நீதிமன்ற விசாரணைகளுக்குச் சிறை கண்காணிப்பாளர் 2 காவலர்களைக் கைதிகளுடன் அனுப்ப வேண்டும். ஆனால் காவலர் பற்றாக்குறை எனக் காரணம் காட்டி பெரும்பாலான கைதிகள் நீதிமன்ற விசாரணைக்குக்கே அழைத்துச் செல்லப்படுவதில்லை. ஆனால் பணக்காரர்களுக்கு இந்த பிரச்சினை எதுவுமில்லை. “தீவிரமாக நோய்வாய்ப்பட்ட கைதிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கும் கூட சிறை நிர்வாகம் இதே காரணத்தையே  கூறுகிறது.
சிறை மருத்துவர் மற்றும் பிற அதிகாரிகளிடம் எந்தக் கைதியாவது நோய்வாய்ப்பட்டுக் கெஞ்சும்போது, ​​​​வெளியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் நிரம்பியுள்ளதாகவும், அங்கு சென்றால் இறந்து விடுவீர்கள் என்று பயமுறுத்தினார்கள். “கைதிகள் இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்குப் பயந்து அமைதியாக அவதிப்பட்டார்கள்”.
சிறை ஊழியர்கள் கைதிகளை பாலியல் ரீதியாகத் தொடர்ந்து துன்புறுத்துகின்றனர். “நான் கூட அவர்களின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன். கைதிகளைச் சோதனை செய்கிறோம் என்ற பெயரில் கைதிகளைத் துன்புறுத்துகிறார்கள்.
பக்கத்துச் சிறையிலிருந்து ஒரு கைதி மாற்றப்பட்டால், அவர் மிக மோசமாக நடத்தப்படுகிறார். முன்னதாக கல்யாணில் உள்ள அதர்வாடி சிறைச்சாலையில் இருந்த ஒரு கைதி, தலோஜா சிறைக்கு மாற்றப்பட்ட பொழுது அவர் பொதுவெளியில் தாக்கப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டார். இதனைக் கண்டித்தது அவர் 8-10 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோதும் அவருக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை என்று அந்த கடிதத்தில் இக்லாக் ரஹீம் ஷேக் எழுதியுள்ளார்.
ஸ்டான் சுவாமி, பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட, கொரோனா தடுப்பூசி அவருக்குப் போடப்படவில்லை. இறுதியில் அவர் உடல்நிலை மோசமாகி பாந்த்ராவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிறகு இறந்தார்.
தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்ட தரவுகள், வருடத்திற்குக் கிட்டத்தட்ட 1,800 கைதிகள், அதிலும் பெரும்பாலும் விசாரணைக் கைதிகள், சிறையில் இருக்கும் போதே இறப்பதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) அறிக்கை கூறியுள்ளது. 2020 இல் மட்டும் சிறைகளில் உள்ள 1,887 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
Source : The Wire
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்