Aran Sei

ஸ்டான் ஸ்வாமி வழக்கில் நீதிமன்றத்தின் செயல்பாடு அநியாயமானது- மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு குற்றச்சாட்டு

எல்கர் பரிஷத் வழக்கில் கைதாகியிருக்கும் ஃபாதர் ஸ்டான் ஸ்வாமிக்கு மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை ( NPRD)  உறிஞ்சு குவளை (சிப்பர்) அனுப்ப திட்டமிட்டிருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

எல்கர் பரிஷத் வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி, அக்போடர் 8 ஆம் தேதி, ராஞ்சியில் இருக்கும் அவருடைய வீட்டில் இருந்து கைது செய்யப்பட்ட ஸ்டான் ஸ்வாமி, மும்பையில் இருக்கும் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நடுக்கவாதம் (பார்கின்சன்ஸ் – Parkinson’s) நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஸ்வாமிக்கு திரவங்களை உட்கொள்ள முடியாததால், உறிஞ்சு குவளை வேண்டுமென சிறை அதிகாரிடகளிடம் பல முறை கேட்ட பிறகும் மறுக்கப்பட்டே வருகிறது.

அர்னாபுக்கு உடனடி ஜாமீன்; ஸ்டான் சாமிக்கு ஒரு உறிஞ்சு குழல் கூட தரமுடியாது – நீதியின் மறுபக்கம்

கடந்த வியாழன் அன்று மும்பையின் சிறப்பு நீதிமன்றம் ஸ்டான் ஸ்வாமிக்கு உறிஞ்சுக் குழல் (straw) மற்றும் உறிஞ்சுக் குவளை அளிக்க மறுப்பு தெரிவித்து, ஸ்டானின் இந்தக் கோரிக்கை குறித்துத் தேசிய புலனாய்வு அமைப்பிடம் கருத்து கேட்டிருக்கிறது.

இந்த மாதத்தில் தொடக்கத்தில்,  இது குறித்து பதிலளிக்க இருபது நாட்கள் வேண்டும் எனக் கேட்ட தேசிய புலனாய்வு அமைப்பு, ஸ்டான் ஸ்வாமி சொல்வது போல அவரிடம் இருந்து உறிஞ்சுக் குவளையை தாங்கள் கைப்பற்றவில்லை என்று மட்டுமே பதில் சொல்லியிருக்கிறது.

83 வயது ஸ்டேன் சாமிக்கு வழங்க உறிஞ்சு குழல் இல்லை – நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்

இதைத் தொடர்ந்து, என்.பி.ஆர்.டி “இதற்கு மேலும் பழங்குடி மக்களுக்கான செயற்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமி உறிஞ்சுக் குவளைக்காக காத்திருப்பதை சகித்துக் கொள்ள முடியாது” என்று தெரிவித்திருக்கிறது.

“டிசம்பர் 4 ஆம் தேதி, நீதிமன்றம் மறுபடியும் தீர்ப்பளிக்க இன்னும் ஏழு நாட்கள் இருக்கிறது. அவ்வளவு நாட்கள் ஸ்டானுக்கு திரவங்கள் மறுக்கப்படக் கூடாது. என்.பி.ஆர்.டியும் அதன் இணை அமைப்புகளும், மஹாராஷ்டிராவின் தலோஜா சிறைக்கு ஸ்டான் ஸ்வாமிக்கு கொடுக்க உறிஞ்சுக் குவளைகள் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்” என என்.பி.ஆர்.டி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கை நடுக்கத்தால் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை – ஸ்ட்ரா வழங்கக் கோரி ஸ்டேன் சாமி மனு

ஸ்டானின் உடைமைகளைத் தாங்கள் கைப்பற்றவில்லை என்பதைச் சொல்வதற்கு தேசிய புலனாய்வு அமைப்பு இருபது நாட்களை எடுத்திருக்கிறது. புலனாய்வு அமைப்பு சொல்வதை ஏற்றாலும் கூட, சிறப்பு நீதிமன்றம் மனிதாபிமான அடிப்படையில் ஸ்டான் திரவங்களை உட்கொள்ள வசதி செய்து கொடுத்திருக்க வேண்டும். இதை செய்யாமல் இருப்பது அநியாயமானது என என்.பி.ஆர்.டி தெரிவித்திருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின் (2016) கீழ், நடுக்கவாதம் உடல் குறைபாடகவே கருதப்படுகிறது. எண்பத்து மூன்று வயதான ஸ்டான் ஸ்வாமி சிறையில் பிற கைதிகளின் உதவியால் மட்டுமே தான் வாழ்வதாக, அதே வழக்கில் கைதான அருண் ஃபெரைராவை வைத்து எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்