Aran Sei

மாவோயிஸ்ட்களுக்காக வேலை செய்கிறார் ஸ்டான் சுவாமி – தேசிய புலனாய்வு அமைப்பு குற்றச்சாட்டு

பீமா கோரேகான் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஃபாதர் ஸ்டான் சுவாமி பழங்குடி சமூக செயல்பாட்டாளர் எனும் போர்வையில், மாவோயிஸ்ட்களின்  நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றம் சாட்டியுள்ளது. அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று அது கூறியுள்ளது.

கடந்த அக்டோபர் 8-ம் தேதி தேசியப் புலனாய்வு முகமை (NIA), 83 வயதான, பழங்குடி மக்கள் உரிமைக்காகப் போராடிவரும் யேசு சபையைச் சேர்ந்த பாதிரியாரான ஸ்டான் சுவாமியைப் பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் கைது செய்து தலோஜா மத்திய சிறையில் அடைத்தது.

நாட்டுப்பற்றுக்கு மதம் இல்லை – மோகன் பக்வத்திற்கு ஆதாரம் தருகிறோம் – ஃபைசான் முஸ்தஃபா

இந்நிலையில், மாவோயிஸ்ட்களின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காகத் தான் ஸ்டான் சுவாமி இருப்பதாக மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்  பிரகாஷ் ஷெட்டி வாதிட்டார். விஸ்தாபன் விரோதி ஜான் விகாஸ் அந்தோலன் மற்றும் சிவில் லிபர்ட்டிக்கான மக்கள் சங்கம் போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளுக்குச் சுவாமி ஒரு தீவிர ஆதரவாளராக இருந்தார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மாவோயிஸ்ட் நடவடிக்கைகளில் தனது ஈடுபாட்டைக் காட்டும் கோப்புகளை,  ஆதாரங்களை அப்புறப்படுத்த முயன்றார். மேலும், அந்தக் கோப்புகளை என்ஐஏ மீட்டெடுத்தது என்று கூறிய வழக்கறிஞர், சட்டத்திலிருந்து தப்பிப்பதற்காகவே ஸ்வாமி இவ்வாறு செய்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

விவசாயி உயிரிழப்பு: “நான் குண்டு துளைத்த காயங்களை பார்த்தேன்” – பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தகவல்

தந்தை ஸ்வான் சுவாமிக்குப் பல்வேறு இடங்களிலிருந்து நிதி வந்துள்ளதாக என்ஐஏ கண்டுபிடித்துள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். இதன் காரணமாக ஸ்வாமிக்கு ஜாமின் வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு எதிரான குற்றங்களில் தான் இதுவரை ஈடுபட்டு ஈடுபடவில்லை என்றும் அரசுத்தரப்பு இதுவரை தனக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறும் என்ஐஏ, அப்படியான ஆதாரங்களை இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றும் அதனால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஸ்வாமி தெரிவித்துள்ளார். அதனால் தனக்கு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA) பொருந்தாது என்றும் ஃபாதர் ஸ்டான் ஸ்வாமி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்