சட்டவிரோத (நடவடிக்கை) தடுப்புச் சட்டத்தில் கீழ் கைதுச் செய்யப்பட்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வரும் ஸ்டான் சுவாமியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.
சுவாமியின் உடல்நிலை மோசமடைந்து வரும் செய்தி வந்தவுடன் மகாராஷ்டிரா தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ள தேசிய மனித உரிமை ஆணையம், “உயிர்காக்கும் நடவடிக்கைகள் மற்றும் ஸ்டான் சுவாமியின் மனித உரிமைகளை பாதுகாப்பதன் ஒரு பகுதியாக, அவருக்கும் முறையான மருத்துவ கவனிப்பு மற்றும் சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
எல்கர் பரிஷத் வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டு தலோஹா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்டான் சுவாமிக்கு, சிறையில் மோசமான நடத்தை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மே மாத இறுதியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த முறை சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த உயர்நீதிமன்ற விசாரணையின்போது, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தனது மக்களுடன் இருக்க விரும்புதாக ஸ்டான் சுவாமி கூறியிருந்தார். இருப்பினும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்குப் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஊபா சட்டத்தின் பிரிவுகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகள் 14, 19 மற்றும் 21க்கு எதிராக இருப்பதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை ஜூலை 6 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.