Aran Sei

உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பிணை வழங்க வேண்டும் – ஸ்டான் ஸ்வாமி உயர்நீதிமன்றத்தில் மனு

credits : the indian express

பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பழங்குடியின உரிமைகள் செயல்பாட்டாளரான ஸ்டான் சுவாமி பிணை மறுக்கப்பட்டதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மாதம் உடல்நிலையை கருத்தில் கொண்டு பிணை வழங்க வேண்டுமென்று 83 வயதான பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி தாக்கல் செய்திருந்த மனுவை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

பீமா கோரேகான் வழக்கு : பழங்குடி உரிமைகள் செயல்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமிக்கு பிணை மறுப்பு

இந்நிலையில், அமர்வு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்ததை எதிர்த்து கடந்த ஏப்ரல் 26 அன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மேலும், குற்றச்சாட்டப்பட்டவரின் மீதான குற்றத்தின் தன்மை காரணமாக உடல்நிலையை கருத்தில் கொண்டு பிணை வழங்க இயலாது என்று அமர்வு நீதிமன்ற பிணை மறுப்பதற்கான காரணமாக தெரிவித்திருந்தது.

ஸ்டான் ஸ்வாமி வழக்கில் நீதிமன்றத்தின் செயல்பாடு அநியாயமானது- மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு குற்றச்சாட்டு

ஸ்டான் ஸ்வாமி தாக்கல் செய்துள்ள மனுவில், அவர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள தலோஜா சிறையில் 40 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

source; the new indian express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்