Aran Sei

கடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

னது அரசாணையையே மதிக்காத அதிமுக அரசுக்கு எதிராக, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், மாணவர்களை வஞ்சிக்காமல், அரசாணைப்படி அரசு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், அண்ணாமலை பல்கலைகழகத்தின் கீழ், ராஜா முத்தய்யா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரிகள், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டவுடன், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி,  கடலூர் அரசுப் பல் மருத்துவக் கல்லூரி என்று முறையே அழைக்கப்படுகிறது.

இங்கு இளங்கலை பொது மருத்துவப்படிப்பான, எம்பிபிஎஸ் கல்வி கட்டணம், ஆண்டுக்கு 5,40,00 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. முதுகலை கல்வி கட்டணம் ஆண்டுக்கு 9,60,000 ரூபாய் வாங்கப்படுகிறது. ஆனால், பிற அரசு கல்லூரிகளில், இளங்கலை மருத்துவப்படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.13,600 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. முதுகலை படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.25,000 மட்டும்தான் வசூலிக்கப்படுகிறது.

’தனியாருக்கு இணையாக அரசு மருத்துவக் கல்லூரி கட்டணம்’ – கட்டண குறைப்பு கோரி மாணவர்கள் போராட்டம்

பிற அரசுப் பல் மருத்துவ கல்லூரிகளில், இளங்கலை பல் மருத்துவ படிப்பிற்கு ரூ.10,600. கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை படிப்பிற்கு 5,40,000 ரூபாயும், முதுகலைக்கு ரூ.9,60,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆகவே, பிற அரசு மருத்துவக் கல்லூரிகளைப் போல், கடலூர் மருத்துவக் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்கக் கோரி, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியையும் அதே பல்கலைக் கழகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

`கல்லூரிக் கட்டணத்தைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் – தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவிப்பு

மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக உயர்கல்வித்துறையின் கீழ் இருந்த சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியைச் சுகாதாரத்துறையின் கீழ் இயங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கல்வி கட்டணத்தை எதிர்த்து மருத்துவ மாணவர்கள் போராட்டம்: சுகாதாரத் துறையின் கீழ் கல்லூரி இயங்க தமிழகஅரசு ஆணை

இந்நிலையில், இதுதொடர்பாக, இன்று (பிப்ரவரி 28) திமுக தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் என உறுதியளித்த அ.தி.மு.க. அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டதை அவர் நினைவுப்படுத்தியுள்ளார்.

அறிவிப்பது ஒன்று, நடைமுறையில் வேறொன்று எனச் செயல்படும் இந்த அரசின் ஆணவப் போக்கினால் மாணவர்களிடம் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், அரசு வெளியிட்ட அரசாணையை உடனே அமல் படுத்தக் கோரி, கடலூரி அரசு மருததுவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பேராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மேலும், “தனது அரசாணையையே மதிக்காத அ.தி.மு.க. அரசுக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரட்டை வேடம் போட்டு கபட நாடகம் ஆடும் அ.தி.மு.க. அரசு, மாணவர்களை வஞ்சிக்காமல் அரசாணைப்படி கட்டணம் வசூலிக்க வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்