Aran Sei

‘அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை; வாக்குறுதிபடி 476 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வேண்டும்’ – பிரதமருக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மிழகத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி தமிழகத்துக்கு உடனே 476 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 20 க்ரையோஜெனிக் கண்டெய்னர்களையும் அவற்றை கொண்டுவர ரயில் போக்குவரத்து வசதியையும் மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “இத்தருணத்தில் தமிழகத்தில் நிலவும் தீவிர மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இன்றைய நிலவரப்படி தமிழகத்துக்கு தினமும் 440 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் இது மேலும் 400 மெட்ரிக் டன் அதிகரித்து அன்றாடத் தேவை 840 மெட்ரிக் டன் அளவாக உயர வாய்ப்புள்ளது.” என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு – நீதிமன்றம் உத்தரவை ஏற்க மறுக்கும் ஒன்றிய அரசு

“இந்நிலையில், துரதிர்ஷ்டவசமாக, தேசிய ஆக்சிஜன் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கான ஒதுக்கீடு 220 மெட்ரிக் டன் என உள்ளது. இது நிச்சயமாக தேவையைப் பூர்த்தி செய்யாது. அதனால் கடந்த மே 1, 2ல் அரசு அதிகாரிகள் தொழிற்சாலைகள் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் தமிழகத்துக்கு 476 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதனாலேயே மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவுகின்றன.” என்று ஸ்டாலின் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘தமிழகத்தில் இருமடங்காகும் ஆக்சிஜன் தேவை; ஒதுக்கீடு செய்ய மறுக்கும் ஒன்றிய அரசு’ – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

“இதற்கிடையில், தற்போது தமிழகத்தின் ஆக்சிஜன் பற்றாக்குறைப் பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது. செங்கல்பட்டில் கடந்த 2 நாட்களில் 13 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் தாங்கள் தலையிட்டு தமிழகத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி தமிழகத்துக்கு உடனே 476 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அவர் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 20 க்ரையோஜெனிக் கண்டெய்னர்களையும் அவற்றை கொண்டுவர ரயில் போக்குவரத்து வசதியையும் மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின் பிரதமர் மோடிக்கு எழுதும் முதல் கடிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்