Aran Sei

ஸ்டான் சுவாமிக்கு நேர்ந்தது போல் இனி எவருக்கும் நிகழக் கூடாது – ஸ்டான் சுவாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

ழங்குடியின மக்கள் உரிமை போராளி ஸ்டான் சுவாமியின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். ஆழ்ந்த இரங்கல்.

அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக் கூடாது.” என பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் பிறந்து, ஜார்கண்ட் மாநிலத்தில் வசித்து வந்த ஸ்டான் சுவாமி. அந்த மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்கள் உரிமைகளுக்காக போராடி வந்தார்.

அர்னாபுக்கு உடனடி ஜாமீன்; ஸ்டான் சாமிக்கு ஒரு உறிஞ்சு குழல் கூட தரமுடியாது – நீதியின் வினோதங்கள்

எல்கர் பரிஷாத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தேசிய புலனாய்வு முகமை அமைப்பால் கடந்த ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்ட மகாராஷ்டிரா மாநிலம் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார்.

மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  ஸ்டான் சுவாமி இன்று (ஜூன் 5) மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்தார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்