Aran Sei

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் : ‘முதல்வரின் வறண்ட இதயத்தை மறக்க மாட்டார்கள்’ – ஸ்டாலின்

போக்குவரத்துக் கழக ஊழியர்களை முதலமைச்சர் நேரில் அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது. சென்ற முறை 58 வயதில் இருந்து 59 வயதாக மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியபோதே 60 வயதாக ஆக்கியிருக்க வேண்டும். தற்போது தேர்தல் வருகின்ற காரணத்தால் அதைக் கருத்தில் கொண்டு அரசியல் ரீதியான பலன்களை எதிர்பார்த்துத் தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் பழனிசாமி, இப்போதுதான் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இருக்கிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஜெயலலிதாவின் வாக்குறுதிகளை கைவிட்ட, மத்திய அரசின் பினாமி அதிமுக அரசு ’ – முத்தரசன் குற்றச்சாட்டு

அதே நேரத்தில், படித்து கல்வித் தகுதி பெற்று, தமது எதிர்காலத்தை நினைத்து, மிகுந்த கவலையுடனும் எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரித்து, அவர்களுக்கான வாய்ப்புகள் வேறு எந்த வழியிலும் பறிபோகாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வகுத்துச் செயல்படுத்துவதும் அவசியம் என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஆனால், போராடும் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேசுவதற்குக் கூட முதல்வர் பழனிசாமிக்கு மனமில்லை. ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு உரிய பயன்களை அளிக்காமல் ஒருபுறம் நிந்தித்து – போராடும் அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தி, வழிமறித்து, இரவோடு இரவாகக் கைது செய்து, அடக்கு முறைகளைக் கையாண்ட அரசு ஊழியர்கள் விரோத மனப்பான்மை கொண்ட – முதல்வர் பழனிசாமியின் வறண்ட இதயத்தை அரசு ஊழியர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.” என்று அவர் கூறியுள்ளார்.

‘கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்ற பொய்யை குழித்தோண்டிப் புதைப்போம்’ – ஸ்டாலின்

இப்போதாவது போக்குவரத்துக் கழக ஊழியர்களை முதலமைச்சர் நேரில் அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் முன் வருவாரா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்