Aran Sei

கைகளை உயர்த்திப் பிடித்த மோடி: ‘சண்டையை சமாதானம் செய்யவா? ஊழல் கறையை காட்டவா?”

பழைய திட்டங்களின் பெயர்களை மாற்றி புதிய திட்டங்களாக முதல்வர் பழனிசாமி அறிவித்து வருகிறார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று (பிப்ரவரி 14), நாகை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசியுள்ளார். அப்போது, “கடந்த 2016-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ‘அம்மா அழைப்பு மையம்’ என்ற பெயரில் தொடங்கி வைத்த புதிய திட்டத்தில், 1100 என்ற தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என அறிவித்தார். தற்போது, அதே திட்டத்தைதான் முதல்வர் பழனிசாமி, மக்கள் குறைதீர்க்கும் மையம் என்ற பெயரில் மீண்டும் தொடங்கி இருக்கிறார்.” என்று அவர் கூறியுள்ளார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: ‘சமஸ்கிருதம் கட்டாயம்; தமிழ் கட்டாயம் இல்லை’ – ஸ்டாலின் கண்டனம்

காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் திமுக ஆட்சியில் ஏற்கெனவே தொடங்கி வைத்த திட்டம் எனவும், இதை மீண்டும் தொடங்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார் என்றும் அதனால் இன்று (நேற்று பிப்ரவரி 14) மோடி தொடங்கி வைத்த திட்டங்களின் பட்டியலில் காவிரி- குண்டாறு திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “விழா மேடையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் கைகளை பிரதமர் மோடி உயர்த்தி பிடித்திருக்கிறார். அவர்களின் கைகள் ஊழல் கறை படிந்தவை எனக் காட்டுகிறாரா? இவர்கள் செய்த ஊழலுக்கு நான் பொறுப்பேற்கிறேன் என்கிறாரா அல்லது சண்டை போட்டு கொண்டிருக்கும் இருவரையும் சமாதானம் செய்ய வந்தாரா எனத் தெரியவில்லை.” என்று அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்