Aran Sei

‘அதிமுக ஆட்சிக்கு அல்ல எதிர்கட்சியாகக் கூட வரமுடியாது’ – ஸ்டாலின்

மிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக  ஆட்சிக்கு அல்ல, எதிர்க்கட்சியாகக் கூட வரமுடியாத சூழலே நிலவுவதாக என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (ஜனவரி 17) காலை தேமுதிக-வைச் சேர்ந்த 3000-த்திற்கும் மேற்பட்டோர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். அந்த விழாவில் ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசியுள்ளார்.

அதில், “அரசின் செலவில் பக்கம் பக்கமாக அதிமுக விளம்பரங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கென கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு விளம்பரம் செய்ய முடியாது. கட்சியின் சார்பில் விளம்பரம் செய்தாலும் அதற்குக் கணக்குக் காட்ட வேண்டும். எனவே தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே திட்டமிட்டு மக்களை எப்படியாவது மயக்கி விட வேண்டும் – எப்படியாவது ஏமாற்றி விட வேண்டும் என்பதற்காக, இப்படி மக்களின் வரிப்பணமாக இருக்கக் கூடிய அரசுப் பணத்தைச் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா’ – அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேட்டி – மீண்டும் உடைகிறதா அதிமுக?

“விளம்பரங்களைப் பார்த்தீர்களென்றால், உலகிலேயே இவர்தான் ஏதோ பெரிய சாதனை செய்த மாதிரி  மிகப்பெரிய அளவுக்கு விருதுகளை வாங்கியது போல எல்லாவற்றிலும் முதலிடம் முதலிடம் என்று மக்களை ஏமாற்றுகிற நிலையில் அந்த விளம்பரங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மேலும், “சி-வோட்டர் என்ற அமைப்பு 22 மாநிலங்களில் கருத்துக்கணிப்பு எடுத்திருக்கிறார்கள். அதில் முதலமைச்சர் பழனிசாமி இருக்கக்கூடிய நம்முடைய தமிழகம் 19-வது மாநிலமாக இடம்பெற்றிருக்கிறது. ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் நவீன் பட்நாயக் அவர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார் என்று 78 விழுக்காடு மக்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் பழனிசாமியின் ஆட்சியை எதிர்த்து 70 விழுக்காடு மக்கள் வாக்களித்துள்ளார்கள். இதையெல்லாம் மூடி மறைத்து இன்றைக்கு இருக்கும் இந்த ஆட்சி தவறான பிரச்சாரங்களைச் செய்து கொண்டிருக்கிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

’பாஜகவுடன் அதிமுக கூட்டணியை அறிவித்த நாளே, எங்கள் வெற்றி உறுதியாகி விட்டது’ – ப.சிதம்பரம்

“நீங்கள் என்னதான் பிரச்சாரம் செய்தாலும், குட்டிக்கரணம் போட்டாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆட்சிக்கு அல்ல எதிர்க்கட்சியாகக் கூட அதிமுக வர முடியாத சூழல் தான் நிலவுகிறது” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்