ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு லஞ்சமாக அளிக்கச் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 1,000 கோடி மதிப்பிலான பணம் மற்றும் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இதே மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்டதை விட இது நான்கு மடங்கு அதிகம் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நடந்து முடிந்த தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 446.28 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து நான்கு கட்ட தேர்தல் நிறைவடைந்திருக்கும் மேற்கு வங்கத்தில் 300 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
தீவிரமடையும் கொரோனாவால் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த கோரிய மம்தா : ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம்
எந்த ஒரு சட்டமன்ற தேர்தலிலும் இல்லாத அளவில் ‘வரலாற்று மைல்கல்’ என அழைக்கும் விதமாக அதிக அளவிலான பறிமுதல்கள் இந்தத் தேர்தலில்களின்போது நடைபெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
வியாழக்கிழமை (ஏப்ரல் 15) வரை தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் ரூ. 446.28 கோடி, மேற்கு வங்கத்தில் ரூ. 300.11 கோடி (இதுவரை), அசாமில் ரூ. 122.35 கோடி, கேரளாவில் ரூ. 84.91 கோடி, புதுச்சேரியில் ரூ. 36.95 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கேரளா உயர்நீதிமன்ற அழுத்தம் – மாநிலங்களவை தேர்தலை ஏப்ரல் 30 ஆம் தேதி நடத்தும் தேர்தல் ஆணையம்
மேலும், அதே காலகட்டத்தில் இடைத் தேர்தல்கள் நடைபெற்ற தொகுதிகளில் பணம், மதுபானம், போதை பொருட்கள் உள்ளிட்ட ரூ. 10.84 கோடி மதிப்புடையவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பறிமுதல்களின் மொத்த மதிப்பு ரூ. 1001.44 கோடியாக உள்ளது. அதே நேரத்தில் 2016 சட்டமன்றத் தேர்தலின்போது இந்த ஐந்து சட்டமன்றங்களில் இது ரூ. 225.77 கோடியாக இருந்தது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.