Aran Sei

காஷ்மீரில் குடியேற்ற சான்றிதழ் பெற்ற வெளிமாநில வியாபாரி – போராளிக் குழுவால் சுட்டுக் கொலை

Image Credits: The Hindu

ம்மு காஷ்மீரில் உள்ளுர்வாசிகளுக்கு மட்டுமே சொத்துக்களை வைத்திருக்கவும் அரசுப் பணி பெறுவதற்குமான உரிமை இருந்துவந்தது. சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ் தகுதியான வெளியூர்வாசிகளுக்கும் இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் குடியேற்ற சான்றிதழைப் பெற வேண்டும். தற்போது, இந்தச் சான்றிதழைப் பெற்றதற்காக ஸ்ரீநகரின் சராய்பாலாவில் 70 வயதான நகைக் கடை உரிமையாளர் சத்பால் நிசால் ஒரு போராளிக்குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று தி வயர்  செய்தி வெளியிட்டுள்ளது.

‘ஜம்மு-காஷ்மீர் குடியேற்ற சான்றிதழ் வழங்குதல் (நடைமுறை) விதிகள் 2020’ சட்டத்தின் கீழ்,  ஜம்மு காஷ்மீரில் 15 ஆண்டுகளாக வசித்தவர்கள் அல்லது 7 ஆண்டுகள் படித்தவர்கள் அல்லது பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்புக்கான தேர்வுகளை அங்கு எழுதிய நபர்கள் இந்தச் சான்றிதழைப் பெற தகுதியுடையவர்கள். முந்தைய ஜம்மு காஷ்மீரின் நிவாரண மற்றும் மறுவாழ்வு ஆணையத்தின் கீழ் குடியேறியவர்களாகப் பதிவுசெய்துகொண்ட மேற்கு பாகிஸ்தான் அகதிகளுக்கும் இந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் தகுதி வழங்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டர் : உடல்களை குடும்பங்களிடம் ஒப்படைக்க மறுக்கும் அரசு – மெஹ்பூபா முஃப்தி கண்டனம்

சில வாரங்களுக்கு முன், சத்பால் நிசால் குடியேற்ற சான்றிதழைப் பெற்றுள்ளார். தாக்குதல் நடந்தபோது அவர் தனது கடையில் இருந்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

”நிஷால், பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூரை பூர்வீகமாகக் கொண்டவர். 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. இதை அடுத்து விதிகள் மாற்றப்பட்ட பின்னர் அவர் குடியேற்ற சான்றிதழுக்கு விண்ணப்பித்தார்” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி கூறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் – ” மாவட்ட கவுன்சிலர்களிடம் பாஜக குதிரை பேரம் “

“அவரது மருமகள் ஜம்முவை சேர்ந்தவர் என்பதால், அவர் சமீபத்தில், ராணுவ படை தலைமையகத்திற்கு அருகில் உள்ள இந்திரா நகர் பகுதியில் ஒரு வீட்டையும், ஹரி சிங் தெரு நகை சந்தையில் ஒரு கடையையும் தனது மருமகளின் பெயரில் வாங்கியுள்ளார்” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

அதிகாரிகளால் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ (டிஆர்எஃப்) என்ற புதிய போராளிக்குழு, தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. சத்பால் நிசாலை குடியேற்ற சான்றிதழ் தொடர்பான பிரச்சினையில்தான் கொன்றதாகவும் அக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. “நாங்கள் இரு அம்சங்களிலும் விசாரிக்கிறோம். அதாவது வணிக போட்டி மற்றும் பயங்கரவாத தாக்குதல் போன்ற கோணங்களில் விசாரணை நடக்கிறது. நாங்கள் விரைவில் விவரங்களை பகிர்ந்து கொள்வோம்” என்று காஷ்மீரின் காவல்துறை தலைவர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்