Aran Sei

கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் உடல்கள் தனித் தீவில் அடக்கம் – இலங்கை அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு

கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடலை, தொலைதூரத்தில் இருக்கும் தீவில் அடக்கம் செய்யும் இலங்கை அரசின் திட்டத்திற்கு, உள்ளூர்வாசிகள் மற்றும் சிறுபான்மையின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்யப்படுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்திருந்தது. இறந்தவர்கள் உடலில் இருந்து கொரோனா பரவாது என நிபுணர்கள் தெரிவித்த போதும், கட்டாய தகனச் சட்டத்தை இலங்கை அரசு அமல்படுத்தியது.

அரசின் இந்த முடிவு, தங்கள் மத சட்டத்திற்கு எதிராக இருப்பதாக, இலங்கையின் மக்கள் தொகையில் 10 விழுக்காடு உள்ள இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் – தேர்தல் விதிமுறை மீறல் என திரிணாமுல் புகார்

கடந்த வாரம் இலங்கை வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமிய மக்களின் இறுதிச் சடங்கு உரிமைகளுக்கு மதிப்பளிக்க, இலங்கை அரசை வலியுறுத்தினார்.

இதனை ஏற்று, இஸ்லாமியர்களின் உடல்களை நாட்டின் வடக்கு எல்லையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும், இரனைத்தீவில் அடக்கம் செய்யும் திட்டத்தை அதிகாரிகள் முன்மொழிந்தனர்.

இந்தத் திட்டத்திற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கத்தோலிக்க பாதிரியார்கள் தலைமையில் தமிழ் மக்கள், இரணைத்தீவிற்கு அருகில் இருக்கும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மியான்மரில் 6 ஊடகவியலாளர்கள் கைது – பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாக ராணுவம் குற்றச்சாட்டு

ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தீவை, கொரோனா பெருந்தொற்றுக்கான மயானமாக பயன்படுத்த கூடாது என எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையின் பிரதான இஸ்லாமிய கட்சியான, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் (எஸ்.எல்.எம்.சி), இறந்தவர்களின் குடும்பங்கள் “எங்கள் மக்களை, எங்கள் சொந்த புதைகுழிகளில் புதைக்க விரும்புகின்றன” எனத் தெரிவித்தது.

“தொலைதூர தீவில் அடக்கம் செய்யும் இந்தத் திட்டம் ஒரு அவமானம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று எஸ்.எல்.எம்.சி தலைவர் ரவுஃப் ஹக்கீம் கூறியுள்ளார்.

தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு – மராட்டிய இடஒதுக்கீடு வழக்கின் முடிவைப் பொறுத்து விசாரணை

இலங்கையின் பெரும்பான்மையான பௌத்தர்கள், இந்துக்களைப் போலவே இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : AFP

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்