Aran Sei

பொருளாதார நெருக்கடியில் இலங்கை – வெளிநாட்டு தூதரகங்களை மூடும் இலங்கை அரசு

பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு தூதரகங்கள், ஒரு துணை தூதரகத்தை மூட இலங்கை வெளிவிவகார அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

ஈராக்கின் பக்தாத் நகரத்தில் உள்ள இலங்கை தூதரகம், நார்வேயின் ஒஸ்லோ நகரத்தில் உள்ள இலங்கை தூதரகம், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள ஒரு துணை தூதரகம் ஆகியவற்றை மார்ச் 31ஆம் தேதி முதல் மூடவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடியில் இலங்கை – 1 பில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்கவுள்ள இந்தியா

துபாயில் உள்ள துணை தூதரகத்தில் ஈராக் தூதரக பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நார்வே தூதரக பணிகள் சுவீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள துணைத் தூதரகத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் உள்ள துணைத் தூதரக பணிகள் ஆஸ்திரேலியாவின் கான்பராவில் உள்ள இலங்கை அதிகாரிகள் அலுவலத்தில் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

63 தூதரகங்களை இலங்கை  பராமரித்து வரும் நிலையில், தற்போது மூன்று தூதரகங்கள் மூடப்பட்டுள்ளன.

Source: Tamil Win

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்