Aran Sei

தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவுக்கு பத்மஸ்ரீ விருது – சர்ச்சையும் பின்னணியும்

credits : pcmag uk

ந்திய அரசு குடிமக்களுக்கு வழங்கும் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, சோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்புவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1996ஆம் ஆண்டு தனது சகோதரர்களுடன் சேர்ந்து, அட்வென்நெட் என்ற பெயரில் வேம்பு உருவாக்கிய மென் பொருள் நிறுவனம், இன்று சோஹோ என்ற பெயரில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது.

ஸ்ரீதர் வேம்பு, இந்தியாவில் 56வது பெரிய பணக்காரர் என்று கூறியுள்ள ஃபோர்ப்ஸ் பத்திரிகை, அவருடைய நிறுவனத்தின் மதிப்பு 2.5 பில்லியன் டாலர்கள் என்றும் கணக்கிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 28, 2019 அன்று மீடியம் இணையதளத்தில், சோஹோ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சரவண ராஜா ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவின் சுருக்கமான மொழியாக்கம்:

கடந்த 2017 ஆம் ஆண்டு, கூகுல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஜேம்ஸ் டெமோர் என்பவர், இண்ட்ரானெட்டில் (இண்ட்ரானெட் என்பது, ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் ஒரு தகவலைப் பெறவும், தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளவும் வசதியாக , அந்நிறுவனத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள கணினித் தொகுதி)  வலதுசாரி கருத்துக்களை பதிவிட்டதற்காக அந்நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த பணிநீக்கத்தை கண்டித்தும், ஜேம்ஸ் டெமோரை ஆதரித்தும் சோஹோ (Zoho) நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி (CEO) ஸ்ரீதர் வேம்பு, அவருடைய நிறுவனத்தின் இண்ட்ரானெட்டில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.

ஒருவரின் தனிப்பட்ட சிந்தனைக்காக பணிநீக்கம் செய்யப்படுவது தவறு என்று கூறியுள்ள ஸ்ரீதர் வேம்பு அந்த நிகழ்வை “சிலிக்கான் வேலியில் நடைபெறும் மாவோயிசம்” என்றும் கூறியுள்ளார்.

பிரதமரை விமர்சித்து ட்வீட் – பணிநீக்கம் செய்யப்பட்ட கோ ஏர் நிறுவன பைலட்

சோஹோ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நான் ஜேம்ஸ் டெமோரை ஆதரித்து ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டிருந்த பதிவைப் படித்தேன். ஜேம்ஸ் டெமொருடைய கருத்தியலில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், கருத்துச் சுதந்திரத்தைப் பற்றியே ஸ்ரீதர் வேம்புவின் வாதத்தில் நான் உடன்பட்டேன்.

சோஹோவில் பத்தாண்டுகளாக பணியாற்றி வந்த நான் கடந்த 2018 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியச் சுதந்திரத்தில் ராஷ்ட்ரிய சுய சேவக சங்கத்தின் பங்கு (ஆர்எஸ்எஸ்) எனும் தலைப்பில் இண்ட்ரானெட்டில் ஒரு பதிவை இட்டேன்.

அந்தப் பதிவு, இந்திய சுதந்திர போராட்டத்தின் வரவாற்றில், ஒவ்வொரு தளத்திலும் அடிப்படைவாதத்துடன் செயல்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை, தேசப்பற்றாளர்கள் என்று கூறுவதன் முரண் பற்றி  பேசியது.

திட்டமிட்டு வெறுப்பை பரப்பும் ஃபேஸ்புக் நிறுவனம் – முன்னாள் ஊழியர் வாக்குமூலம்

நான் எதிர்பார்த்தது போல சில வலதுசாரி சித்தாந்தம் கொண்டவர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால் நான் கனவில் கூட நினைக்காத வகையில், சோஹோவின் முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, இந்த பதிவிற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார். அவர், என்னுடைய பதிவு, வரலாற்றை தவறாக சித்தரிப்பதாகவும் இழிவுப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

’என்.எல்.சி விபத்தில் பலியான 20 தொழிலாளர்கள் – நிர்வாகமே காரணம்’ – பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு

மேலும், ”கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நீங்கள் இங்கு எது வேண்டுமானாலும் சொல்ல முடியாது. உங்கள் கருத்துக்களை பரப்ப உங்கள் சொந்த தளத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். நான் உங்களை பணிநீக்கம் செய்யமாட்டேன், ஆனால் எனக்கும் உங்களுக்கும் கடுமயான கருத்து வேறுபாடு உள்ளது. நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன், உங்களுடைய கருத்துக்கள் அந்த  நிறுவனத்துடைய கருத்துக்கு மாறாகவும், அதன் முதன்மை செயல் அதிகாரியின் கருத்துக்கு மாறாகவும்  இருக்கும் பட்சத்தில், இங்கே நீங்கள் இன்னும் வேலை  செய்வதற்கான காரணம் என்ன?” என்று ஸ்ரீதர் வேம்பு என்னிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.

2,200 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ‘கொக கோலா’ – வருவாய் குறைந்ததால் நடவடிக்கை என விளக்கம்

ஜேம்ஸ் டெமொரின் பணிநீக்கத்தின் போது கருத்துச் சுதந்திரம் பற்றியும், தனியார் துறை ஊழியர்களின் பன்முகத்தன்மை பற்றியும், ஒருவரின் தனிப்பட்ட கண்ணோட்டத்தை பற்றியும் பேசிய ஸ்ரீதர் வேம்பு, தற்போது முற்றிலும் தலைகீழாக பேசினார். ஆனால் அவருடைய சித்தாந்தம் தான் நிறுவனத்தின் சித்தாந்தம் என்று அவர் நிறுவ முயன்றதைத் தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவர் கூறிய ஒரு விஷயத்தை மட்டும் நான் ஆமோதித்தேன். ஆம், பணத்தை விட நம்முடைய சித்தாந்தமும் மதிப்பும் தான் முக்கியம் என முடிவு செய்து சோஹோ நிறுவனத்தில் இருந்து வெளியேறினேன்.

சரவண ராஜா

இந்நிலையில், ஜனவரி 14ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில், சோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியிடம் கேள்வி கேட்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீதர் வேம்பு, வலதுசாரி இதழான துக்ளக்கையும் அதன் முன்னாள் ஆசிரியர் சோ.ராமசாமியையும் புகழ்ந்து பேசினார்.

இந்த நிகழ்வில், ஸ்ரீதர் வேம்பு கலந்து கொண்டது குறித்து, சரவண ராஜா தன் டிவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

அதில், “கடந்த ஆண்டு, ஆர்எஸ்எஸ் தொழிற்நுட்ப பிரிவின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு, தற்போதுதான் அவரை (ஸ்ரீதர் வேம்பு) நான் பாராட்டியிருந்தேன்” என்று கூறியிருந்த சரவண ராஜா, துக்ளக் நிகழ்ச்சியில் ஸ்ரீதர் வேம்பு கலந்து கொண்டது குறித்து “வெளிப்படையாக  அவருடைய அரசியல் உரிமையை செயல்படுத்தியதற்கு மறுபடியும் அவரை பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்