Aran Sei

கர்நாடகா: பாங் ஒலிக்கு எதிராக பரப்புரை செய்யும் இந்துத்துவாவினர் – மசூதிக்கு வெளியே உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்ற வலியுறுத்தல்

ஸ்லாமிய வியாபாரிகள் விற்கும் ஹலால் இறைச்சிக்கு எதிராக கர்நாடகாவைச் சேர்ந்த இந்துத்துவா அமைப்புகள் பரப்புரை மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது மசூதிகளிலுக்கு வெளியேயுள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்றக் கோரி பரப்புரை செய்ய தொடங்கியுள்ளன.

இச்சம்பவங்களுக்கு கர்நாடக மாநில பாஜக அரசு மௌனம் காத்துவருவதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

மசூதியில் இருக்கும் ஒலிப்பெருக்கிகள் ஒலி மாசு ஏற்படுத்துவதாகவும், அவற்றை உடனே அகற்றுமாறும் ஸ்ரீராம சேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக்கும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் மாநில அரசை வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடகாவில் ஹலால் இறைச்சி விற்ற இஸ்லாமிய வியாபாரியை தாக்கிய வழக்கு: பஜ்ரங் தள் உறுப்பினர்கள் 5 பேர் கைது

அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று ஸ்ரீராம சேனை அமைப்பு எச்சரித்துள்ளது. மசூதியில் இருக்கும் ஒலிப்பெருக்கிகள் அகற்ற வேண்டும் என்ற பரப்புரையின் ஒரு பகுதியாக, மசூதிகளில் ஓதப்படும் பாங் ஒலிக்கு எதிராக தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில்களில் பஜனை நடத்தவுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து, நேற்று (ஏப்ரல் 4), செய்தியாளர்களைச் சந்தித்து பேசியருந்த முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான எச்.டி.குமாரசாமி, “75 ஆண்டுகளாக அந்த ஒலிபெருக்கிகளால் எந்தப் பிரச்னையும் இல்லை. இப்போது மட்டும் எப்படி பிரச்சினை வருகிறது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

‘மசூதி ஒலிபெருக்கிகளால் 75 ஆண்டுகளாக இல்லாத பிரச்சனை இப்போது மட்டும் ஏன்?’ – எச்.டி.குமாரசாமி கேள்வி

மேலும், “பாஜகவும் வலதுசாரி அமைப்புகளும் சமூகத்தை சீரழித்து வருகின்றன. தெருக்களுக்குத் தீ வைக்கிறார்கள். இத்தனை நடந்துக்கொண்டிருக்கையில் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? ஆபத்தான சக்திகளை நம்மை சுற்றி வளர அனுமதித்துள்ளீர்கள்” என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.

முன்னதாக, “மசூதிகளுக்கு வெளியே ஒலிப்பெருக்கிகள் எதற்கு? மதம் உருவான போது, ஒலிப்பெருக்கி இருந்ததா? ஒலிப்பெருக்கிகளை அரசாங்கம் அகற்ற வேண்டும். அதை அவர்கள் செய்யாவிட்டால் ஒவ்வொரு மசூதியின் முன்பாகவும் மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியினர் ஹனுமான் சாலிசா பாடுவார்கள்”என்று அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே அண்மையில் தெரிவித்திருந்தார்.

மசூதிக்கு வெளியே இருக்கும் ஒலிப்பெருக்கியை அகற்றாவிட்டால், மசூதிக்கு முன் ஹனுமான் சாலிசாவை பாடுவோம் –  மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே

இதே போல கர்நாடகாவில் இயங்கும் ஸ்ரீ ராமசேனா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளும் மசூதிக்கு வெளியில் ஒலிப்பெருக்கிகளை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Source:  New Indian Express, The Hindu 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்