Aran Sei

இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை – காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் படுகாயம்

லங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் மாளிகை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. உணவு, சமையல் எரிவாயு, பெட்ரோல், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்களின்  விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசம்: மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீட்டித்த ஒன்றிய அரசு

நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு தடுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிக்க இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்வது தொடங்கியுள்ளது.

தவறான வரலாற்றைப் பரப்பும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை திரையிட அனுமதித்திருக்க கூடாது – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதிபர் இல்லத்தை முற்றுகையிட மக்கள் கூட்டம் அவ்வப்போது முயன்று வருவதால் அதிபர் இல்லம் முன் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி நேற்று எதிர்க்கட்சியினர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது தடுப்பு வேலிகளை அகற்றிய போராட்டக்காரர்கள் ராணுவ வாகனத்திற்கு தீ வைத்தனர். இதனால் முற்றுகை போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர்  கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர்.

பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 பேர் காயமடைந்தனர். இந்த போராட்டம் காரணமாக கொழும்பு நகரில் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொடை ஆகிய பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்