Aran Sei

’தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல்’ – கண்டித்து மே17 இயக்கம் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படை கப்பலை படகில் மோதி ராஜ்கிரண் என்பவரை படுகொலை செய்ததோடு, இரண்டு மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை தொடர்ச்சியாக தாக்கிப் படுகொலை செய்வதும், காயப்படுத்துவதும், உடமைகளை அழிப்பதும், கைது செய்து சிறையிலடைப்பதும் என தொடர் அஜாராகத்தில் ஈடுபடும் இலங்கை அரசை கண்டித்து, சென்னையி நுங்கம்பாக்கதில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் மே பதினேழு இயக்கம் சார்பாக நேற்று (23-10-2021) மாலை நடைபெற்றது.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகையின் போது, தமிழ்நாட்டு மீனவர்களை கொன்ற இனப்படுகொலை இலங்கை அரசை கண்டித்தும், தொடர்ச்சியாக படுகொலை செய்து வரும் இலங்கை அரசை கண்டிக்காத, மீனவர்களுக்குப் பாதுகாப்பு வழங்காத இந்தியா ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் சௌ. சுந்தரமூர்த்தி அவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்