Aran Sei

நிதி நெருக்கடியில் இலங்கை – 1 பில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்கவுள்ள இந்தியா

லங்கையின் மிக மோசமான நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கும், உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும் 1 பில்லியன் அமெரிக்கா டாலரை கடனாக இந்தியா வழங்கவுள்ளது.

குஜராத் பள்ளிப்பாடத்திட்டத்தில் பகவத் கீதை – காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வரவேற்பு

இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே டெல்லிக்கு வந்திருந்த பொழுது, பாரத ஸ்டேட் வங்கிக்கும் இலங்கை அரசிற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மார்ச் 16 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பசில் ராஜபக்சே சந்தித்துப் பேசினார். பிறகு மார்ச் 17 அன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரையும் பசில் ராஜபக்சே சந்தித்து பேசியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில், இதுவரை இலங்கைக்கு 0.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது. தற்போது வழங்க இருக்கும் 1 பில்லியன் டாலர்களில் 400 மில்லியன் டாலர் ரிசர்வ் வங்கியில் இருந்து பணமாகவும், 500 மில்லியன் டாலர் கடனைக் குறைந்த காலம் கழித்து தருவதாகவும், இலங்கையின் அத்தியாவசிய எரிபொருள் இறக்குமதிக்கு உதவ 500 மில்லியன் டாலரை இந்தியா கடனாக தரவுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 1830% அதிகரித்த அதானியின் சொத்துகள் – ஹுருன் ஆய்வு நிறுவனம் தகவல்

இலங்கை மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 2020 ஆகஸ்ட் மாதம் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கை, நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தியது. நாட்டின் அத்தியாவசிய தேவைகளான எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறையை இலங்கை சந்தித்துள்ளது.

இலங்கையில் அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இலங்கையின் இந்த நிதி நெருக்கடிக்கு ராஜபக்சே அரசை எதிர்க்கட்சிகளைக் குற்றம் சாட்டி வருகின்றன. இலங்கையின் இந்த நிதி நெருக்கடியால் மக்கள் போராட்டங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன.

பாஜக அமைச்சரின் மகனால் கொல்லப்பட்ட விவசாயிகள் குறித்து ‘லக்கிம்பூர் ஃபைல்ஸ்’ என படம் எடுக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ்

இலங்கை அரசு, வெளிநாடுகளில் இருந்து வாங்கிய 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை இந்த ஆண்டு செலுத்த வேண்டிய இக்கட்டான நிலைமையில் உள்ளது. இந்த வெளிநாட்டுக் கடன்களில் 10% கடனை அடைப்பதற்கு சீனாவின் உதவியை இலங்கை நாடியுள்ளது. மேலும் சர்வதேச நாணய நிதியத்திடமும் இலங்கை உதவி கோரியுள்ளது.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்