Aran Sei

இலங்கை பொருளாதார நெருக்கடி – காகிதப் பற்றாக்குறையால் அச்சுப் பதிப்புகளை நிறுத்திய செய்தித்தாள்கள்

லங்கையின் இரண்டு முக்கிய செய்தித்தாள்கள் காகிதப் பற்றாக்குறையால் தங்கள் அச்சுப் பதிப்புகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து இந்த முடிவெடுத்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், ஆங்கில மொழி நாளிதழான தி ஐலண்ட் மற்றும் சிங்களப் பதிப்பான திவயின ஆகியவை நிலவும் காகிதப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என்று கூறியுள்ளது.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

அத்துடன், முக்கிய தேசிய நாளிதழ்களும் கடந்த ஐந்து மாதங்களில் செலவுகள் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாகவும், வெளிநாட்டில் இருந்து பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களாலும் பக்கங்களைக் குறைத்துள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள டாலர் தட்டுப்பாடு அனைத்து துறைகளையும் பாதித்துள்ளது. பிப்ரவரியில் 17.5 சதவீத பணவீக்கம் இருந்ததால் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.

வாகனங்கள் பெட்ரோல் நிரப்புவதற்காக எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. கடந்த வாரத்தில் குறைந்தது நான்கு பேர் எரிபொருள் பெற்றுக்கொள்ள நீண்ட மணிநேரம் காத்திருந்த நிலையில் உயிரிழந்தனர்.

ஆளுனருக்கு 300 கோடி லஞ்சமா?: அம்பானி, ஆர்எஸ்எஸ் பிரமுகர் மீது குற்றச்சாட்டு – சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்

தற்போதைய அரசாங்கம் 2019 நவம்பரில் ஆட்சிக்கு வந்தபோது 7.5 பில்லியன் டாலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.3 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளன.

இந்த ஆண்டு இலங்கைக்கு அதன் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதற்கு சுமார் 7 பில்லியன் டாலர்கள் தேவைப்படுகின்றன. இலங்கை தற்போது ஏற்பட்டுள்ள நாணய நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகளிடமிருந்து அதிக கடன்களை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: tamilwin

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்