Aran Sei

இலங்கை : மின் திட்டத்தை அதானிக்கு வழங்க மோடி கட்டாயப்படுத்தியதாக கூறிய மின்சார வாரியத் தலைவர் பெர்டினாண்டோ ராஜினாமா.

Credit: The Wire

மின் திட்டத்தை நேரடியாக அதானிக்கு வழங்க மோடி அழுத்தம் அளித்தார் என கூறியிருந்த இலங்கை மின்சார வாரியத்தின் தலைவர் எம்.எம்.சி பெர்னாண்டோ அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகர தனது ட்விட்டர் பதிவில், இலங்கை மின்சார வாரியத்தின் தலைவராக எம்.எம்.சி பெர்னாண்டோ அனுப்பிய ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டேன். புதிய தலைவராக தற்போதைய துணைத் தலைவர் நலிந்த் இளங்கோவன் பதவியேற்கவுள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை நேரடியாக அதானி குழுமத்திற்கு வழங்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தன்னிடம் கூறியதாக என்று நாடாளுமன்ற குழு முன்பு இலங்கை மின்சார வாரிய தலைவர் எம்எம்சி பெர்டினாண்டோ, வாக்குமூலம் அளித்துள்ளார்.

மின் திட்டத்தை அதானிக்கு வழங்க அழுத்தம் கொடுத்த மோடி – இலங்கை மின்சார வாரியத் தலைவர் வாக்குமூலம்

News1st செய்தி தொலைக்காட்சி பதிவிட்ட வாக்குமூல காணொளியின்படி, “நவம்பர் 24, 2021 அன்று, ஒரு கூட்டத்திற்குப் பிறகு, ஜனாதிபதி என்னை வரவழைத்து, திட்டத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்குமாறு இந்தியப் பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கிறார் என்று கூறியதாக என்று ஃபெர்டினாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு கடற்கரையில் 500 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தை அமைப்பதற்கு அதானி குழுமம் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறித்து பொதுத் துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவர் மற்றும் மற்றொரு உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

Source: NewsFirst.lk

Bulldozer இருக்க நீதிமன்றம் எதற்கு? | உ.பி.,-இல் பாஜக வெறியாட்டம் | Yogi Adityanath | Afreen Fatima

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்