Aran Sei

“இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதித்த இலங்கை” – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

இலங்கையில் இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதித்தும் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுத்தீன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையை ஆளும் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி சிறுபான்மை இஸ்லாமியர்கள் மற்றும் தமிழர்களை ஒடுக்கும் ஒரு பாசிச அரசாகச் செயல்பட்டு வருகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

கடைசி தீர்வு ஊரடங்கு என்று அறிவுரை கூறும் பிரதமரே; முதல் தீர்வான தடுப்பூசியை முதலில் முறையாகச் செயல்படுத்துங்கள்- சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புப்படுத்தி ராஜபக்சே அரசு 11 இஸ்லாமிய  அமைப்புகளைத் தடைசெய்வதாக அறிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளில் பெரும்பாலானவை பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து மக்களிடையே பரப்புரை செய்த அமைப்புகள் என்று தெரிவித்த  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ” இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் மதங்களை கடந்து தொண்டாற்றி வரும் அமைப்புகளாகும். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இலங்கை அதிபரிடம் தாக்கல் செய்யப்பட்ட அறிககையில் உள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்தத் தடை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இனவாதமாகச் செயற்படும் சிங்கள அமைப்புகள் ஏன் தடை செய்யப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.” என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

“பாஜக இந்நாட்டைவிட்டு அகற்றப்படும் போதுதான் நாட்டிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அர்த்தம்” – நடிகர் சித்தார்த்

மேலும் அந்த அறிக்கையில், ஏப்ரல் 21 அன்று ஈஸ்டர் தின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வில் பங்கு கொண்ட இலங்கை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் பேசியதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில், “அன்று எமது சகோதரர்களைத் தாக்கியவர்கள் மத அடிப்படைவாதிகள் அல்லர். அந்த மத அடிப்படைவாதிகளை தமது கை பொம்மைகளாக பயன்படுத்தி, தமது அரசியல் அதிகாரங்களை வலுப்படுத்திக் கொள்ள முன்னின்றவர்களே அதனைச் செய்தனர். தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சில குழுவினர் முன்னெடுத்த முயற்சியின் பிரதிபலனாகவே அதனை நாம் பார்க்கின்றோம். மதத்தையோ, இனத்தையோ, மொழியையோ மற்றொருவரைத் துன்புறுத்துவதற்காக பயன்படுத்த வேண்டாம் என நாட்டிலுள்ள அனைவரிடமும் கோரிக்கை முன்வைக்கின்றோம். அத்துடன் தமது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காக ஏஏனையவர்களைக் கொலை செய்யும் சிந்தனையிலிருந்து விடுபடுங்கள்.” என்று குறிப்பிட்டது கவனத்திற்குரியது.

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு உதவத்தயார் – பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்து தனது சிறுபான்மை விரோத போக்கை வெளிப்படுத்தியதாக  ராஜபக்சே அரசை சாடிய அவர்,  இன்று அதிகாலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் அவரது இல்லத்தில் வைத்துக் குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு உதவியதாக அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளதாக பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் நிலங்களையும் ராஜபக்சே அரச கைப்பற்றி வருவதாகவும்,. அண்மையில், மட்டக்களப்பு தமிழ் விவசாயிகளின் நிலங்களில், இலங்கை வனத்துறையினர் திடீரென எல்லைக் கற்களைக் கொண்டு வந்து நட்டு, இவை எல்லாம் வனப்பகுதிகள் என அறிவிப்பு செய்து இருப்பதாகவும், இந்த இடங்களை விட்டு தமிழர்கள் வெளியேற வேண்டும் என மிரட்டப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

”முதலில் இந்திய வம்சாவளித் தமிழர்கள், அடுத்து ஈழத் தமிழர்கள், இப்போது இஸ்லாமியர்கள் என அடுத்தடுத்து குறி வைத்து சிங்கள இனவாத அதிகார வர்க்கம் தாக்கி வருகின்றது. இந்த சம்பவங்கள் இலங்கை சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இனவெறியுடன் செயல்படும் இலங்கை அரசை மத்திய, மாநில அரசுகள் கண்டனம் தெரிவிப்பதோடு, தனது சிறுபான்மை விரோத போக்கைக் கைவிட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்