Aran Sei

‘பெகசஸ் ஸ்பைவேரை தவறாக பயன்படுத்தியவர்களை குற்றவாளி கூண்டிலேற்ற வேண்டும்’ – வாட்ஸ் அப் வலியுறுத்தல்

credits : The News Minute

நாங்கள் இத்தனை ஆண்டுகளாக கூறிக் கொண்டிருந்ததை, தற்போது வெளியாகும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன என்று வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைவர் வில் காத்கட் கூறியுள்ளார்.

பெகசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware) எனும் உளவு பார்க்கும் மென்பொருள் மூலம், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உட்பட பலர் கண்காணிக்கப்படுவதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ குரூப் (NSO Group) என்ற நிறுவனத்தின் தயாரிப்பான பெகாசஸ் ஸ்பைவேர், உளவு பார்ப்பதற்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளாகும். இந்த ஸ்பைவேரை, ஸ்மார்ட் போன்களில் ஊடுருவச் செய்து, ஒரு தொலைபேசியை முற்றிலுமாக கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்.

பெகசஸ் ஸ்பைவேர் மூலம் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் – பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா கண்டனம்

இந்த செயலியை பயன்படுத்தி பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு, வாட்ஸ் அப் நிறுவனம், என்.எஸ்.ஒ குரூப் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது.  இது தொடர்பாக, கடந்த 2019 ஆம் ஆண்டு, அக்டோபர் 30 ஆம் தேதி, வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைவர் வில் காத்கட், “இன்றைய தினம் ஸ்பைவேர் எனும் உளவு மென்பொருளுக்கு எதிரான நிலைப்பாட்டை வாட்ஸ் அப் நிறுவனம் எடுக்கிறது. என்.எஸ்.ஒ நிறுவனம் பொறுப்பாக அரசாங்ககளுக்கு வேலை செய்வதாக கூறுகிறது. ஆனால், அவர்களால் வேவுப்பார்க்கப்படும் பட்டியலில், 100 க்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இந்த துஷ்பிரயோகம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.” என்று டிவீட் செய்திருந்தார்.

இந்தியாவை சேர்ந்த 40 பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டனர் – சர்வதேச பத்திரிகைகள் நடத்திய புலன்விசாரணையில் அம்பலம்

இந்நிலையில், நேற்றைய தினம், வில் காத்கட், ”நாங்கள் இத்தனை ஆண்டுகளாக கூறிக் கொண்டிருந்ததை, தற்போது வெளியாகும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. என்.எஸ்.ஒ நிறுவனத்தின் ஆபத்தான ஸ்பைவேர், உலகம் முழுவதும் பல்வேறு மனித உரிமை மீறலை செய்து வருகிறது. இந்த துஷ்பிரயோகம் நிறுத்தப்பட வேண்டும்.” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சவுதி பத்திரிக்கையாளரை கொலை செய்ய சவுதி  இளவரசர் ஒப்புதல் அளித்துள்ளார் – அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

”இந்த சம்பவம் இணைய பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. கைப்பேசி தான் லட்சக்கணக்கான மக்களின் முதன்மையான கணிணி. அரசு மற்றும் நிறுவனங்கள், இணையத்தை பாதுகாக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். நமது பாதுகாப்பும், சுதந்திரமும் இதில் தான் அடங்கியுள்ளது.” என்று அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி வன்முறைகள்: உளவுத்துறையின் தோல்விக்கு அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

மேலும், ”மனித உரிமை ஆர்வலர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு, இணையத்தை பாதுகாக்கவும், ஸ்பைவேரை தவறாக பயன்படுத்திய அனைவரையும் குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும்.” எனவும் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்