இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 2017 இல் பெகாசஸ் உளவு எண்ணிக்கையை இந்திய அரசாங்கம் வாங்கியதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. செயலியைக் கொண்டு உளவு பார்ப்பது தேசத்துரோகம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தி நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின்படி, 2017 இல் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் பெகஸிஸ் ஸ்பைவேர் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் வாங்க கையெழுத்தாகியுள்ளது. இதன் மதிப்பு ஏறத்தாழ 2 கோடி பில்லியன் டாலர் ஆகும்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மோடி அரசு இந்திய குடிமக்களை எதிரிகளை போல் பாவித்து போர் ஆயுதத்தைப் பயன்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். “பெகசிஸைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக உளவு பார்த்தது தேசத் துரோக செயலாகும். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, நீதி வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தி நியூயார்க் டைம்ஸின் அறிக்கை குறித்து விளக்கம் கேட்க பிரஸ் ட்ரஸ்ட் ஆப் இந்தியா ஒன்றிய அரசை அனுகியுள்ளது. இதற்கு ஒன்றிய அரசு பதிலளிக்கவில்லை.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது கூறுகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட இந்திய குடிமக்களை உளவு பார்க்க ராணுவ தர ஸ்பைவேரைப் பயன்படுத்திய பாஜக அரசு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.