Aran Sei

’I’m Back’ – விண்டேஜ் விராத் கோலி ரிட்டன்ஸ்

நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிப்பெற்றது. இதற்கு விராத் கோலியின் அதிரடியான 90 ரன்கள் முக்கியமாக இருந்தது.

கோலி இந்த தொடரில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார், ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் அரை சதம் அடித்திருந்தார். ஆனாலும் ஒரு டாப் க்ளாஸ் விண்டேஜ் கோலியின் இன்னிங்ஸை பார்க்க கோலி ரசிகர்களும் பெங்களூரு ரசிகர்களும் மட்டுமல்ல. ஒட்டு மொத்த ஐபிஎல் ரசிகர்களே காத்துக்கிடந்தனர். அந்த தவத்திற்கு நேற்று வரன் கிடைத்தது.

முதலில் இறங்கிய பெங்களூரு அணிக்கு பின்ச், டிவில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் விக்கெட் அதிர்ச்சி அளித்தது. முதல் 12 ஓவரில் வெறும் 69 ரன்களே இருந்தது. 120 ரன்களுக்குள் மொத்த அணியும் சுருண்டு விடும் என்று இரு அணி ரசிகர்களும் நம்பினர். ஆனால் கடைசி வரை களத்தில் இருந்த கேப்டன் விராத் கோலியின் வான வேடிக்கையில் அடுத்த 8 ஓவரில் 100 ரன்கள் குவித்தது பெங்களூரு அணி.

இன்னும் தெளிவாக சொன்னால், 15-ஆவது ஓவரில் 95 ரன்களுக்கு 4 விக்கெட்களில் இருந்தது. விராத் கோலி மற்றும் டுபெ கூட்டணி 20-ஆவது ஓவர் முடிவில், 169 ரன்களுக்கு அணியை கூட்டி சென்றது.

அவரின் ட்ரேட் மார்க் துறுதுறு பேட்டிங் ஸ்டைலை நேற்று பார்க்க முடிந்தது. மைதானத்தையே தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். அவரின் ஸ்டைலில் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தன. டீலில்லியர்ஸ் ஸ்டைலில் ஒரு சிக்ஸர் அடித்தது தான் ஹைலைட். அது மட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு ரன் ஓட்டத்தை, இரண்டு ரன்னாக ஓடி ரன் சேர்த்தார்.

நன்றி : twitter.com/imVkohli

மூன்றாவது ஓவரில் இறங்கிய கோலி, மொத்தம் 52 பந்துகள் விளையாடினார். அதில் 11 டபுல்ஸ் ஓடி எடுத்தார். 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் 40 ரன்கள் போக, மீத 50 ரன்கள் ஓட்டத்தில் எடுக்கப்பட்டது.

மேலும் இந்த போட்டியின் மூலம், பெங்களூரு அணிக்காக விளையாடி 6000 ரன்களை கடந்துள்ளார்.  ஐபிஎல் தொடரில் 5576 ரன்களையும், சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் 424 ரன்களையும் எடுத்து மொத்தமாக 6000 ரன்கள் என்ற சாதனையை செய்தார்.

அடுத்து இறங்கிய சென்னை அணியின் பேட்டிங் சொதப்ப, 20 ஓவர்களுக்கு 132 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

போட்டிக்கு பின் இவ்வெற்றி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, “ இந்த போட்டியில் நாங்கள் எங்களுடைய முழுமையான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாக கருதுகிறேன். இந்த போட்டியின் முதல் பாதியில் நாங்கள்  இல்லை. ஆனால் இரண்டாவது பாதியில் நல்ல நிலையை நோக்கி முன்னேற வேண்டும் என்று நினைத்தேன். மேலும் 140 முதல் 150 ரன்கள் அடித்தால் நல்லது என்று கருதினேன். ஆனால் முடிவில் ரன்கள் கொஞ்சம் அதிகமாகவே வந்தது. “ என்றார்.

அடுத்ததாக மேலும் ஒரு சாதனைக்காக காத்திருக்கிறார் கோலி. அடுத்து வரவிருக்கும் போட்டிகளில் 7 சிக்ஸர்கள் அடிப்பதன் மூலம் 200 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் என்ற பட்டியலில் இணைய உள்ளார் கோலி. 182 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், இதுவரை மொத்தமாக 193 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இன்னும் 7 சிக்ஸர்கள் அடித்தால், இந்த சாதனையைப் புரிந்த நான்காவது இந்திய வீரர் ஆவார். ரோகித் ஷர்மா, ரெய்னா, தோனி ஆகிய மூவரும் முன்னரே இந்த சாதனையை செய்துள்ளனர். இதே விண்டேஜ் கோலியை பார்க்க பெங்களூரு அணி ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்