Aran Sei

‘பேட்ட பராக்க்க்’ – முதல் போட்டியிலேயே அடிச்சுத் தூக்கிய ’யாக்கர்’ நடராஜன்

மிழகத்தை சேர்ந்த நடராஜன், இன்று (டிசம்பர் 2) நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் களமிறங்கவுள்ளார். இதில், ஆஸ்திரேலியாவை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பார்ப்பனர் அல்லாத தமிழர் ஒருவர் இந்திய அணிக்காக விளையாடவுள்ளார்.

“ஆறு பாலும் யாக்கரா?” – ஏற்காடு எக்ஸ்பிரஸ் தங்கராசன் நடராஜன்

நடராஜன் தங்கராஜ்

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த, இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன், முதலில், 2014 ஆம் ஆண்டு நடந்த ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணியில் விளையாடினார். அதை தொடர்ந்து, தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று தன்னுடைய திறமையை காட்டினார்.

இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், தனது யார்க்கர் பந்து வீச்சுத் திறமையால் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக, தோனி, வில்லியர்ஸ் போன்ற அதிரடி நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை காலி செய்துள்ளார்.

தடைகளை தகர்த்து இந்திய அணியில் இடம் பிடித்த சின்னப்பம்பட்டி நடராஜன்

நவம்பர் 27-ம் தேதி முதல் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில் இருவது ஓவர் போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலில் நடராஜன் சேர்க்கப்பட்டார். முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று (டிசம்பர் 1) மூன்றாவது போட்டி நடக்கவுள்ளது.

இன்று (டிசம்பர் 1) காலை, இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோவை பதிவு செய்துள்ளது. அதில், ”இது ஒரு பெரிய நாள். நடராஜன், இன்று இந்திய அணியில் அறிமுகமாகிறார். அவர் தொப்பி 232-க்கு பெருமை வாய்ந்த உரிமையாளராகிறார். உங்கள் சிறப்பான ஆட்ட்த்தை கொடுங்கள்!”

 

ஐபிஎல் கிரிக்கெட் கமென்டரியில் ஆர்ஜே பாலாஜியின் வக்கிரம் – பா.பிரேம்

வீடியோவில், இந்திய அணியின் கேப்டன் அவருக்கு 232 எண் இட்ட தொப்பியை கொடுக்கிறார். மற்ற வீரர்கள், கைகளை தட்டி அவரை உற்சாகப்படுத்துகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த பார்ப்பனர் அல்லாத ஒருவர் இந்திய அணிக்காக விளையாடவுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஆச்திரேலிய அணி, 49.2 ஓவர் முடிவில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது. பத்து ஓவர்களை விசிய யாக்கர் நடராஜன், ஒரு மெய்டன் உட்பட இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்