Aran Sei

’ராக் ஸ்டார்’ ரோகித் அதிரடி – மும்பை வெற்றி

.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப்பிற்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் பதிமூன்றாவது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்று நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சந்தித்தது. டாஸ் ஜெயித்த பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல், பந்து வீச்சை தேர்வு செய்தார்.

மோசமான தொடக்கம்

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே குயின்டான் (0) போல்ட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் (10) ரன் அவுட் ஆனார். இஷான் கிஷனும் (23) பாதியிலேயே போக, 83 ரன்களுக்கு 3 விக்கெட் போனது.

ரோகித் விளாசல்

பொல்லார்ட்டுடன் ஜோடி சேர்ந்த ரோகித் அணியை சரிவில் இருந்து மீட்டார். ஜேம்ஸ் நீஷத் வீசிய ஓவரில் இரண்டு பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸ்களும் விரட்டினார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 45 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸருடன் 70 ரன்கள் குவித்து, முகமது ஷமி பந்து வீச்சில் வெளியேறினார்.

பொல்லார்ட் – பாண்ட்யா கூட்டணி

அதன் பின் கூட்டணி சேர்ந்த பொல்லார்ட் – ஹர்திக் பாண்ட்யா ஜோடி ஹாட்ரிக் சிக்ஸர்களுடனும், பவுண்டரிகளுடனும் மும்பை அணியின் ஸ்கோரை எகிற வைத்தது. கடைசி ஐந்து ஓவர்களில் 89 ரன்கள் குவித்தது. 20 ஓவர்களின் முடிவில், மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் தொடக்கம்

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வாலும்(25), கேப்டன் லோகேஷ் ராகுலும் (17) சுமாரான தொடக்கம் கொடுத்தனர்.

பூரன் அதிரடி

மிடில் ஆர்டரில் களமிறங்கிய பூரனின் அதிரடி ஆட்டம் ஓரளவிற்கு நம்பிக்கை கொடுத்தது. அவரும் 27 பந்துகளில் 44 ரன்களுடன் (3 பவுண்டரி, 2 சிக்ஸர்) வெளியேறினார்.

தோல்வி

அடுத்து வந்த மேக்ஸ் வெல்லும் 11 ரன்களில் வெளியேற, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் மும்பை தனது 2-வது வெற்றியை பெற்றுள்ளது.

நன்றி : NDTV Sports

இப்போட்டி குறித்து வர்ணனையாளர் விக்னேஷிடம் அரண்செய் பேசிய போது, “மும்பை அணி பேட்டிங், பவுலிங் என எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்கிறது. இந்த ஆட்டத்தில் ரோகித் அடித்தார். போன ஆட்டத்தில் முன்னாள் அண்டர்-19 கேப்டன் இஷான் கிஷன் 99 ரன் அடித்தார். ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட் என்று அடித்து ஆட ஆட்கள் உள்ளனர். ஆல் ரவுண்டர் கேப்பபிலிட்டி அதிகம் உள்ளது.“ என்றார்.

பஞ்சாப் அணியை பற்றி கூறுகையில், “அந்த அணி ’டிபண்டென்ஸி ஆன் ஒன் ப்ளேயர்’ மோடில் தன் இருக்கிறது. ஏதாவது ஒரு ப்ளேயரின் ஆட்டத்தை நம்பியே அதன் வெற்றி இருக்கும். பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ராகுல் 130 அடித்ததால் வெற்றி பெற்றது. ஒருவேளை ஓப்பனிங் சொதப்பினால், மிடில் ஆர்டரும் சரிந்துவிடுகிறது. இது பஞ்சாப்பின் மிகப்பெரிய பிரச்சனை. சர்ஃபரஸ் கான் ரஞ்சி ட்ராஃபியில் சதங்கள் அடித்து, நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால் அவரை கடைசியில் களமிறக்குகிறது பஞ்சாப். அவர் முன்னால் இறங்கினால் நன்றாக விளையாடக் கூடியவர். மேக்ஸ்வெல் சொதப்புகிறார். பூரனை நம்ப முடியவில்லை. இப்படி எல்லா வீரர்களிடமும் ஒரு பிரச்சனை இருப்பதால், பஞ்சாப்பால் வெற்றியடைய முடியவில்லை” என்றார்.

வரும் ஞாயிறு அன்று, சென்னை அணியுடன் பஞ்சாப் மோதுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்