Aran Sei

’இவன் உலகத்துக்கு ஏதோ சொல்ல வரான்’ – அஸ்வினின் மன்கட்

ன்கட் சர்ச்சை பற்றி தில்லி அணியின் பந்து வீச்சாளர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக் கூறியுள்ளார்.

கடந்த வருட ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மன்கட் முறைப்படி அப்போதைய பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வின் அவுட் செய்தார். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.

அஸ்வினுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்தனர். கிரிக்கெட்டின் விதிகளில் கீழ் ’மன்கட்’ முறையில் விக்கெட் எடுப்பது சரியானது என்று ஒரு பிரிவினரும். ‘ஜெண்டில்மேன் ஷிப்’ உள்ள கிரிக்கெட்டில் இது முற்றிலும் தவறு என்றும் ஒரு பிரிவினரும் கருத்து தெரிவித்தனர்.

தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-வது ஆட்டத்தில், தில்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில்  வென்றது.

நன்றி : Hotstar

அந்தப் போட்டியில் பெங்களூா் அணி பேட்டிங் செய்கையில், 3-ஆவது ஓவரை தில்லி அணி வீரா் அஸ்வின் வீசினாா். அப்போது மறுமுனையில் இருந்த பெங்களூா் அணி ஆரோன் ஃபின்ச், பந்து அஸ்வின் கைகளிலிருந்து விடுபடும் முன்பாகவே பவுலிங் கிரீஸை விட்டுத் தாண்டினாா். அப்போது அஸ்வின் பந்தை வீசாமல் அப்படியே நின்றுகொண்டு, ‘மன்கட்’ முறையில் ஃபின்சை ஆட்டமிழக்கச் செய்வதுபோல் விளையாட்டுக் காட்டிச் சிரித்தாா். ஃபின்சை கிரிஸூக்குள் நிற்கும்படி நடுவர் அறிவுறுத்தினார்.

இதைக் கண்ட தில்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் புன்னகை செய்தார். காரணம், இந்த வருட ஐபிஎல் போட்டியில் மன்கட் முறையில் எவரையும் ஆட்டமிழக்கச் செய்யக்கூடாது என்று அஸ்வினிடம் தாம் கூறியுள்ளதாகப் போட்டி தொடங்கும் முன் பாண்டிங் கூறியிருந்தாா்.

இந்நிலையில் ஆரோன் ஃபின்சை மன்கட் முறையில் ரன் அவுட் செய்யாதது குறித்து அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,”தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். இதுதான் இந்த வருடத்துக்கான முதலும் கடைசியுமான எச்சரிக்கை. இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன். பிறகு என்னைக் குறை சொல்லவேண்டாம். மேலும், நானும் ஃபின்சும் நல்ல நண்பர்கள்” என்று கூறியுள்ளார். அதில் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கையும் டேக் செய்துள்ளார்.

இதைப் பற்றி முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரான ரஸல் அர்னால்ட், அஸ்வினை டேக் செய்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டு, அவரைக் கலாய்த்துள்ளார். அதில், “ என்ன அஸ்வின், பாண்டிங் பேச்சக் கேட்டு ஃபைனல் வார்னிங் குடுத்திருக்க. வார்னிங் யாருக்குனு சொல்லலியே?

அந்நியன் படத்துல பிரகாஷ் ராஜ் சொல்ற மாதிரி, “இது வெறும் வார்னிங் இல்ல. இட்ஸ் ஸ்டேட்மெண்ட். இவன் இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வரான்” என்று கூறியுள்ளார்.

லிப்டர்டு என்ற ட்விட்டர் பக்கம், உத்தப்ரபிரதேசக் காவல்துறையை விமர்சிக்கும் வகையில் மீம் ஒன்றைப் பதிவிட்டுள்ளது.

இது போல சமூக வலைதளங்களில் பலர் ட்ரோல்களையும், மீம்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்